என்கிட்ட கேட்டுட்டு முடிவு எடுங்க... ஜீவாவுக்கு மாமனார் வைத்த செக்!

Pandian Stores Today Episode
X

Pandian Stores Today Episode

Pandian Stores Today Episode-மாமனாரால் அவமானப்படும் ஜீவா அடுத்தடுத்த திருப்பங்களோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் இந்த வாரம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் இன்றைய எபிசோட் | Pandian Stores serial today episode youtube 1st May 2023

Pandian Stores Today Episode-சூப்பர் மார்க்கெட்டுக்கு அரிசி சப்ளை பண்ணிட்டு இருந்தார்ல சுப்பையா அண்ணன் அவர சப்ளை பண்ண வேண்டாம்னு சொல்லிட்டீங்களோ என்று ஜனார்த்தனன் கேட்கிறார். அதற்கு ஜீவா இப்படி பதிலளிக்கிறார்.

அவரு அனுப்புற அரிசியில நிறைய கல்லு இருக்கு மாமா அதான் வேணாம்னு சொல்லிட்டேன் என்று ஜீவா சொன்னதும் ஜனார்த்தனன் முகம் மாறுகிறது. இதனால் மொத்த குடும்பமும் என்ன ஆகப் போகுதோ என முழிக்கிறார்கள்.

ஜனார்த்தனன் ஜீவாவிடம் ஒருமுறை முடிவு எடுக்குறதுக்கு முன்னாடி என்கிட்ட ஒரு வார்த்தை கேட்டுக்கிடுங்க மாப்ள என்கிறார். ஆனால் இது ஜீவாவின் தன்மானத்தை தொட்டுவிட்டதாக உணர்கிறார் ஜீவா. இதனால் அடுத்து என்ன ஆகுமோ என்கிற பதைபதைப்பு.

இரவில் மனைவி மீனாவிடம் உங்க அப்பா மொத்த வியாபாரத்தையும் என்கிட்ட கொடுத்ததுக்கு அப்றமும் அவரு என்னய நம்பவே இல்லல என்று வருத்தப்படுகிறார். அதற்கு என்ன பதில் சொல்ல என்று தெரியாமல் மீனா தவிக்கிறார்.

சுப்பையா அண்ணன போலீஸ் தேடுதாம்ல நல்ல வேள நாம தப்பிச்சோம் மாப்ள என்று ஜனார்த்தனன் கூறுகையில், அடுத்து ஜீவா இன்னொரு புகாரையும் முன்வைக்கிறார். அதுமட்டுமில்ல நமக்கு மசாலா சப்ளை பண்றார்ல அவருகூட என்று பேச்சைத் துவங்கும்போதே மருமகன் என்று கூட பாராமல் தனது கருத்தை ஆக்ரோசமாக வைக்கிறார் ஜனார்த்தனன். இது ஜீவாவுக்கு மேலும் ஈகோவைத் தூண்டக் காரணமாக அமைகிறது.

எந்த முடிவு எடுத்தாலும் என்கிட்ட கலந்து பேசிட்டு முடிவு எடுங்க என்று ஜனார்த்தனன் பேசியதும் ஜீவாவுக்கு மிகவும் சுர்ரென்று ஆகின்றது. இதனால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பது எதிர்பார்ப்புக்குரியதாக மாறியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நேற்று எபிசோட் | Pandian Stores serial yesterday episode youtube 29th April 2023

அண்ணன், தம்பிகளுடன் சண்டை போட்டுக்கொண்டு வெளியேறி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதாக நினைத்து கிடைக்கும் இடமெல்லாம் கடனில் பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்கள் கண்ணனும், ஐஸ்வர்யாவும். இவர்களுக்கு அடுத்து பிரச்னை வர காத்திருக்கிறது.

இந்நிலையில் ஐஸ்வர்யாவும், கண்ணனும் வீடியோ போடலாம் என்று ஒரு டூயட் பாட்டை பாடுகிறார்கள். அதை வீடியோவில் பதிவு செய்யும்போது கண்ணன் ஐஸ்வர்யாவைத் தாங்குவது போல ஒரு போஸ் கொடுக்க, ஐஸ்வர்யா விழுந்து விடுகிறார். இதனால் அவருக்கு வயிற்றில் அடிபட்டுவிடுகிறது. கர்ப்பமாக இருக்கும் அவரை உடனடியாக மருத்துமனைக்கு கூட்டிச் செல்கிறார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஐஸ்வர்யாவுக்கு அவசரமாக சில பரிசோதனைகளை மேற்கொள்ளவும் மருத்துவச் செலவுக்காகவும் பணம் கட்ட சொல்கிறார்கள். அதனை கட்டச் செல்லும் கண்ணனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி. கார்டில் பணம் இல்லை பர்ஸில் பணம் இல்லை என்ன செய்வதென்றே புரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான்.

முன்னதாக கண்ணனும் ஐஸ்வர்யாவும் அவர்களது வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். ஐஸ்வர்யா காய்கறிகளை வெட்டிக்கொண்டே பேசுகிறார்.

ஐஸ்வர்யா : கண்ணா உன்கிட்ட எக் பீட்டர் வாங்கிட்டு வர சொன்னேன்ல

கண்ணன் : காசு இல்ல ஐஸு

ஐஸ்வர்யா : அதான் கார்டு இருக்குல்ல

கண்ணன் : கார்டே எல்லா இடத்துலயும் குடுத்துட்டு இருக்க முடியுமா

ஐஸ்வர்யா : நீ தினமும் ஆம்லெட் கேக்குற. எனக்கு முட்ட கலக்கி கலக்கி கை வலிக்குது கண்ணா

கண்ணன் : ஏது நீ ரெண்டு முட்ட கலக்குறதுக்கு கை வலிக்குதா

ஐஸ்வர்யா : உனக்கு என் கஷ்டம் புரியாது கண்ணா. இந்தா இதெல்லாம் வெட்டு என காய்கறிகளை கொடுக்கிறாள்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் நாளைய எபிசோட் | Pandian Stores serial tomorrow episode youtube 2nd May 2023

விரைவில் அப்டேட் செய்யப்படும்


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!