முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்?

முடிவுக்கு வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்?
X
இவர்களை சேர்த்து வைக்க கதிர் - முல்லை இருவரும் போராடுகிறார்கள். வரும் ஜூன் மாதம் இந்த தொடர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வரும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் - தம்பி ஒற்றுமையாக இருக்கும் வீட்டில் அவர்களுக்கு வரும் மனைவி மார்களும் ஒற்றுமையாக ஒன்று சேர்ந்து வாழ்கிறார்கள் என்பதே கதை. ஒற்றுமையாக எனும்போதே அதெப்படி சண்டை இல்லாமல் ஒரு குடும்பம் இருக்க முடியும் என்று கேட்கலாம். அந்த ஒற்றைக் கேள்வியை வைத்தே இவர்கள் தொடரை இழு இழு என்று இழுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

சண்டைகள் வரும் அதை சமாதானம் செய்வார்கள். மாதத்துக்கு ஒரு சண்டை. சில சமயங்களில் சண்டைகள் 2,3 மாதங்களுக்கும் போகும். சண்டைகள் போக சமாதானம் செய்யும் நிகழ்வுகளும், சுப நிகழ்ச்சிகளில் குடும்பங்கள் ஒன்று சேர்வதும். பிரிவதும் சேர்வதுமாக சென்று கொண்டிருக்கிறது.

ஒரே நேரத்தில் ஒரே வீட்டில் 3 பேர் கற்பமாக இருக்கும் நிகழ்வுகளும் நடந்தது. ஆனால் இப்போது ஜீவாவைப் போட்டு அனைவரும் அழுத்த கண்ணன் வீட்டை விட்டு போக, ஜீவாவும் வீட்டை விட்டு போக, அண்ணன் மூர்த்தியும் வெளியே போவதாக சொல்ல என்ன செய்ய என கதிர் தவிக்கிறான்.

இந்நிலையில் மீண்டும் 4 பேரும் எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதை அடுத்த 3 மாதங்களுக்கு இழுக்கிறார்கள். முதலில் ஜீவாவும் மூர்த்தியும் சந்திக்கும் காட்சி அடுத்த வாரம் நிகழ்கிறதாம். அவர்களுக்குள் மீண்டும் பேச்சுவார்த்தை ஏற்பட, அடுத்தடுத்து ஒவ்வொருவராக சேர்கிறார்களாம்.

இவர்களை சேர்த்து வைக்க கதிர் - முல்லை இருவரும் போராடுகிறார்கள். வரும் ஜூன் மாதம் இந்த தொடர் முடிவுக்கு வரும் என்று கூறப்படுகிறது.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!