நயன் - விக்கி திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப மறுத்த ஓடிடி நிறுவனம்..?!

நயன் - விக்கி திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்ப மறுத்த ஓடிடி நிறுவனம்..?!
X

நயன்-விக்கி திருமண நிகழ்ச்சியில் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ்சிவன் திருமண நிகழ்ச்சி ஓடிடிதளத்தில் வெளியாகுமா? வெளியாகாதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் பிரமாண்ட அரங்குக்குள் நடந்தது. குறிப்பிட்ட எண்ணிக்கையில்… குறிப்பிட்ட பிரபலங்களுக்கு மட்டுமே திருமண அழைப்பிதழ் அளிக்கப்பட்டது. ஆனால், திருமண அரங்குக்குள் செல்போன், கேமரா உள்ளிட்ட திருமண நிகழ்வைப் பதிவு செய்யும் எவ்வகையான எலக்ட்ரானிக் சாதனங்களையும் அனுமதிக்கவில்லை. இதுபோன்று பல்வேறு கட்டுப்பாடுகளை முன்னதாகவே அறிவித்திருந்ததால், அழைப்பிதழ் பெற்றும் சில திரையுலகப் பிரபலங்களும் அரசியலின் முக்கியப் பிரமுகர்களும் திருமண நிகழ்வில் கலந்து கொள்ளவில்லை.

நயனும் விக்கியும் திருமண நிகழ்ச்சியைப் படப்பதிவு செய்து வெளியிடுவதற்கான உரிமையை ஒரு தனியார் ஓடிடி தளத்துக்கு 25 கோடி ரூபாய்க்கு கொடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், அத்தளம் திருமணத்தன்று தாலிகட்டும் ஒரு சில படங்களைத் தவிர, வேறெந்தப் படங்களையும் பொதுவெளியில் பகிரக்கூடாது என கட்டளையிட்டிருந்தது.

இந்தநிலையில், விக்னேஷ் சிவன், திருமணம் முடிந்த ஒரு மாத நிறைவைக் கொண்டாடும் விதமாக, அவரது சமூக வலைத்தளப் பக்கத்தில், இயக்குநர் மணிரத்னம், ரஜினிகாந்த், ஷாருக்கான், அட்லி, அனிருத், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பிரபலங்கள் திருமணத்தில் பங்கேற்ற படங்களை ஒவ்வொரு நாளும் பதிவிட்டு வந்தார். இதனை சம்பந்தப்பட்ட ஓடிடி நிறுவனம் ரசிக்கவில்லை.

ஏற்கெனவே, தாலிகட்டும் படத்தை தவிர வேறு படமோ கிளிப்பிங்ஸோ மீடியாக்களுக்கு தரக்கூடாது என்று ஓடிடி நிறுவனம் தடை விதித்திருந்த நிலையில், அதை மீறி, திருமணமான 30வது நாளைக் கொண்டாடும் வகையில் விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்ற பிரபலங்களின் சில படங்களை வெளியிட்டது ஓடிடி தளத்திற்கு பிடிக்கவில்லையாம். இதனால் நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்புவதில் இருந்து ஓடிடி நிறுவனம் பின்வாங்கியிருப்பதாக அதிகாரபூர்வமற்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்தநிலையில், நயன் - விக்கி ரசிகர்கள் திருமண நிகழ்ச்சியைக் காண முடியுமா, முடியாதா என்ற குழப்பத்தில் உள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!