ஆஸ்கர் விருதுபெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி டைரக்டராகப் போறார்

ஆஸ்கர் விருதுபெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி டைரக்டராகப் போறார்
X
ரசூல் பூக்குட்டி. கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார்.

ஆஸ்கர் விருதுபெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி, டைரக்டராகப் போறார்.

பிரபல ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி. கேரளாவைச் சேர்ந்த இவர் தமிழ், இந்தி, தெலுங்கு உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். பல விருதுகளை வென்றுள்ள இவர், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்துக்காக ஆஸ்கர் விருதைப் பெற்றவர். 2019-ம் ஆண்டு வெளியான `தி சவுண்ட் ஸ்டோரி' என்ற படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் ரசூல் பூக்குட்டி. இப்போ இயக்குநர் ஆகியிருக்கிறார்.

அவர் இயக்கும் படத்திற்கு ஓட்டா (Otta) என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்தப் படத்தில் ஆசிப் அலி, அர்ஜூன் அசோகன், மம்தா மோகன்தாஸ், சத்யராஜ், ரஞ்சி பணிக்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் தொடக்க விழா கொச்சியில் நடந்துச்சு.

சில்ரன் ரியூனைட்டட் எல்எல்பி மற்றும் ரசூல் பூக்குட்டி புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன. இதன் தொடக்க விழாவில் நடிகர் சத்யராஜ், இயக்குநர்கள் சித்திக், சிபி மலையில், கே. மது, இசை அமைப்பாளர் ஜெயச்சந்திரன், நடிகர் பாபு ஆண்டனி, நடிகை லிசி உட்பட பலர் கலந்துகிட்டாய்ங்க...மேலதிக விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க இருக்கிறது.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!