தமிழ் சினிமாவில் நடிக்க பிரபல நடிகருக்கு திடீர் எதிர்ப்பு

தமிழ் சினிமாவில் நடிக்க பிரபல நடிகருக்கு திடீர் எதிர்ப்பு
X

பிருத்விராஜ்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் சர்ச்சை கருத்து தெரிவித்த, நடிகர் பிருத்விராஜை, தமிழ் சினிமாவில் நடிக்க அனுமதிக்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகம் - கேரளா இடையே முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கருத்து வேறுபாடு நீடிக்கிறது. பழமையான அணை என்ற போதும், பலமாக இருப்பதாக தமிழகம் கூறி வருகிறது. கேரளாவோ, அணை பலவீனமாக உள்ளது; புதிய அணையை கட்ட வேண்டும் என்று கூறி வருகிறது.

இந்த சூழலில், மொழி உள்ளிட்ட பல தமிழ்ப்படங்களில் நடித்துள்ள கேரள நடிகரான பிருத்விராஜ், அணை விவகாரம் குறித்து கருத்து தெரிவித்தது தமிழகத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, பிருத்விராஜ் தனது டிவிட்டர் பதிவில், "125 ஆண்டுகள் பழமையான இந்த அணை ஒரு செயல்பாட்டு கட்டமைப்பாக இருப்பதற்கு எந்தவித காரணமும் இல்லை. அரசியலையும், பொருளாதாரத்தையும் ஒதுக்கித்தள்ளிவிட்டு, சரியானதை செய்வதற்கு இதுவே நேரம்'' என்று தெரிவித்துள்ளார்.

நடிகர் பிருத்விராஜின் கருத்துக்கு , தமிழகத்தில் எதிர்த்து கிளம்பியுள்ளது. அவரை தமிழ் படங்களில் இனி நடிக்க அனுமதிக்கக்கூடாது என்று சில அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன. அதேபோல், தேனியில் அவரது உருவபொம்மையை எரித்து சிலர் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!