/* */

ஒளிப்பதிவாளர் வி.கே மூர்த்தி மறைந்த நாளின்று

இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படத்தின் ஒளிப்பதிவாளர் வெங்கடராம பண்டிட் கிருஷ்ணமூர்த்தி மறைந்த நாளின்று...

HIGHLIGHTS

ஒளிப்பதிவாளர் வி.கே மூர்த்தி மறைந்த நாளின்று
X

வெங்கடராம பண்டிட் கிருஷ்ணமூர்த்தி இந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர். இவர் வயலின் கலைஞரும் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்துகொண்டு சிறைக்குச் சென்ற விடுதலைப் போராட்ட வீரருமாவார். இயக்குநர் குரு தத்துடன் இணைந்து அவரது திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர்.

இந்திய திரைப்படங்களில் கருப்பு-வெள்ளை பின்னணியில் சிறந்த ஒளிப்பதிவுகளைத் தந்தவர். இந்தியாவின் முதல் சினிமாஸ்கோப் திரைப்படமான 'காகஸ் கி ஃபூல்' திரைப்படத்திற்கு இவர்தான் ஒளிப்பதிவாளர். திரைப்படத் துறைக்கு, குறிப்பாக இந்திய திரைப்படத்துறைக்கு இவர் அளித்த பங்களிப்புகளுக்காக இவருக்கு பன்னாட்டு இந்திய திரைப்பட அகாதமி (IIFA) வாழ்நாள் சாதனையாளர் விருதினை 2005 ஆம் ஆண்டில் வழங்கியது. மேலும் இவரது பணியினை சிறப்பிக்கும் விதமாக இவருக்கு ஜனவரி 19, 2010 இல் தாதாசாகெப் பால்கே விருது (2008) வழங்கப்பட்டது.


நவம்பர் 26, 1923 இல் மைசூரில் பிறந்தவர் வி. கே. மூர்த்தி. தனது பள்ளிக்கல்வியை லட்சுமிபுரம் பள்ளியில் பயின்றபோது இசையை விருப்பப் பாடமாகத் தேர்வு செய்து வயலின் வாசிக்கக் கற்றுக்கொண்டார்.1946 இல் பெங்களூருவிலுள்ள ஸ்ரீ ஜெயச்சாமராஜேந்திர தொழிற்நுட்பப் பயிலகத்தில் ஒளிப்பதிவில் பட்டயப் படிப்பினை முடித்தார். மாணவப் பருவத்தில் 1943 இல் இந்திய விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறைக்குச் சென்றார். கட்புல ஊடகத்தின் (visual medium) மீது கொண்ட அளவற்ற ஈடுபாட்டால் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டு பம்பாய்க்குச் (இன்றைய மும்பை) சென்றார்.

திரைப்படத்துறையில், மூர்த்தி மகாராணா பிரதாப் உடன் தனது பயணத்தை துவக்கினார். 1951 ஆம் ஆண்டில் வெளியான 'பாஜீ' (Baazi) இந்தித் திரைப்படத்தில் உதவி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இத் திரைப்படம் இயக்குநர் குரு தத் இயக்கிய முதல் திரைப்படமாகும். மூர்த்தியின் ஒளிப்பதிவின் சிறப்பைக் கண்ட குரு தத், ''ஜால்'' (1952) என்ற தனது அடுத்த திரைப்படத்திற்கு மூர்த்தியையே ஒளிப்பதிவாளராகத் தேர்வு செய்தார். இத் திரைப்படத்திற்கு மூர்த்தி தலைமை ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். அதிலிருந்து குரு தத்தின் இறப்பு வரை (1964) அவரது அனைத்துத் திரைப்படங்களுக்கும் மூர்த்தியே ஒளிப்பதிவாளாக இருந்தார்.

1959 இல் குருதத்தின் இயக்கத்திலும் மூர்த்தியின் ஒளிப்பதிவிலும் உருவான ''காகஸ் கே ஃபூல்'' திரைப்படம் குருதத் இயக்கிய திரைப்படங்களிலேயே சிறந்த திரைப்படமாகக் கருதப்பட்டு பல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றது. மேலும் ஒளிப்பதிவிலும் பல விருதுகள்பெற்று இந்தியத் திரைப்பட வரலாற்றில் சாதனை படைத்தது. இப்படத்திற்காக மூர்த்திக்குச் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான ஃபிலிம்பேர் விருது வழங்கப்பட்டது. 1962 ஆண்டில் வெளியான :சாகிப் பீபி அவுர் குலாம்" திரைப்படமும் இவருக்கு விருதினைப் பெற்றுத் தந்தது. இயக்குநர் குரு தத்தின் இறப்புவரை மூர்த்தி அவரது திரைப்படங்களுக்கு மட்டுமே ஒளிப்பதிவாளராக இருந்தார். குரு தத்துடன் இணைந்து பணியாற்றிய வெற்றித் திரைப்படங்களில் சில: பியாசா, சாகிப் பீபீ அவுர் குலாம், ஆர் பார்.

குரு தத்தின் மரணத்திற்குப் பின் இயக்குநர் கமல் ஆம்ரோகியுடன் இணைந்து அவரது மிகச் சிறந்த திரைப்படங்களான பாகீசா (Pakeezah) மற்றும் ரசியா சுல்தான் இரண்டிலும் பணியாற்றினார். பின்வந்த நாட்களில், பிரமோத் சக்கரவர்த்தி, சியாம் பெனகல், கோவிந்த் நிகலானி போன்ற இயக்குநர்களின் திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தார்.

ராஜேந்திர சிங் பாபு இயக்கித் தாயாரித்த கன்னடத் திரைப்படமான ''ஹூவு ஹான்னு'' வின் (1993) ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய மூர்த்தி அத் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருந்தார். சியாம் பெனகல் இயக்கத்தில் தூர்தஷனில் ஒளிபரப்பான ''பாரத் ஏக் கோஜ்'' தொடரின் ஒளிப்பதிவாளராகவும் பணி புரிந்தார்.

2001 ஆம் ஆண்டு தனது 80 ஆவது வயதில் மூர்த்தி, திரைப்படத் துறையிலிருந்து ஓய்வெடுக்கும் எண்ணத்தில் மும்பையிலிருந்து பெங்களூருக்குக் குடிபெயர்ந்தார். ஏப்ரல் 7, 2014 இல் தனது 91 ஆவது வயதில் தனது பெங்களூரு இல்லத்தில் மரணமடைந்தார்.

Updated On: 7 April 2022 4:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு