சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஓ மை டாக் பட பிரிவியூ ஷோ

சூர்யாவின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஓ மை டாக் பட பிரிவியூ ஷோ
X
ஓ மை டாக் திரைப்படத்தில் அருண் விஜய், விஜயகுமார் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர்.

ஓ மை டாக் திரைப்படத்தில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர். சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் ஓ மை டாக் பட பிரிவியூ ஷோ இன்னிக்கு இருக்குது.

நடிகர் சூர்யா தற்போது சிறந்த தயாரிப்பாளராகவும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களைத் தயாரித்து வருகிறார். பசங்க 2, 36 வயதினிலே, சூரரைப்போற்று உள்ளிட்ட பல ஹிட் படங்களைத் தனது 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார். ஓ மை காட் படத்தையும் இதே சூர்யா தயாரிச்சிருக்கிறார்.

ஷரோவ் சண்முகம் என்பவர் இயக்கி இருக்கும் படம் . ஷரோவ் சண்முகம் ஏற்கனவே இரண்டு சிங்களப் படங்களை இயக்கியிருக்கிறார். தமிழில் இவர் அறிமுகமாகும் முதல் திரைப்படம். ஆனால் மிகுந்த அனுபவசாலி போல் பொறுமையாக இருந்து இந்த படத்தை நிறைவு செய்திருக்கிறார்.

இதில் அருண் விஜய், அவரது தந்தை விஜயகுமார் மற்றும் அவரது மகன் அர்னவ் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 தலைமுறையினர் நடித்துள்ளனர்.

நடிகர் அருண் விஜய் மகன் அர்னவுக்கும் அவன் வளர்க்கும் நாய்க்கும் இடையே உள்ள பாச போராட்டத்தை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.நாளை -ஏப்ரல் 21-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாக உள்ள நிலையில் இப்படத்தின் பிரஸ் ஷோ இன்னிக்கு மதியம் இருக்குது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!