நடிகை நித்யாமேனனை கடுப்பேற்றிய ரசிகர்

நடிகை நித்யாமேனனை கடுப்பேற்றிய ரசிகர்
X
nithyamenon troll, thiruchitrambalam heroine  -  நடிகை நித்யாமேனன் 
Actress Nithya Menon - ரசிகர் ஒருவர், நடிகை நித்யாமேனனை, 'தாய்கிழவி' என அழைத்ததால், கடுப்பான அவர், ' என்னை தாய்கிழவி என்று அழைக்காதீர்கள். அது எனக்கு பிடிக்கவில்லை,' என, தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

Actress Nithya Menon - தனுஷ், நித்யா மேனன் நடிப்பில் கடந்த 18ம் தேதி வெளியான படம் 'திருச்சிற்றம்பலம்'. மித்ரன் ஜவஹர் இயக்கிய இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ்ராஜ், பாரதிராஜா உட்பட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, அனிருத் இசை அமைத்துள்ளார்.


இந்த படத்தில், 'ஷோபனா' என்ற கேரக்டரில் வரும் நித்யா மேனனின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. தனுஷை ஒரு தலையாக காதலித்து பின்னர் அதில் வெற்றி பெறுவது மாதிரியான கதை. இந்த படத்தில் அவர் தனுஷ்க்கு அடிக்கடி அட்வைஸ் செய்வதால், அவரை 'தாய்கிழவி' என அழைத்து, ஒரு பாடல் படத்தில் இடம் பெறுகிறது.


இதனால் சமூக வலைத்தளங்களில் நித்யா மேனனை பலரும், 'தாய்கிழவி' என்றே குறிப்பிடுகிறார்கள். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது சமூக வலைத்தளத்தின் மூலம், ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.


அப்போது ஒரு ரசிகர், அவரை 'தாய்கிழவி' என்று அழைக்க, நித்யா மேனன் கடுப்பானர். ''என்னை தாய்கிழவி என்று அழைக்காதீர்கள். அது எனக்கு பிடிக்கவில்லை. அந்த படத்தின் கேரக்டர் அது, அதனை அத்தோடு விட்டு விடுங்கள்" என்று அந்த ரசிகருக்கு, பதிலளித்தார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!