அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் எடுத்த நித்யா மேனன்

அரசு தொடக்க பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பாடம் எடுத்த நித்யா மேனன்
X

நித்யா மேனன் (பைல் படம்).

பழங்குடியினர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு நித்யா மேனன் ஆங்கில பாடம் எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழில் ஓ.காதல் கண்மணி, மெர்சல், திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நித்யா மேனன். ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் வரதயா பாளையத்தில் கல்கி பகவானின் ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் நடிகை நித்யா மேனன் தவறாமல் வந்து செல்வது வழக்கம். நேற்று முன்தினம் அந்த ஆசிரமத்திற்கு நடிகை நித்யா மேனன் சென்றார். அப்போது அங்கு நடைபெற்ற சிறப்பு தியானத்தில் கலந்து கொண்டார். பின்னர் கிருஷ்ணாபுரம் அருகே உள்ள பழங்குடியினர் கிராமத்துக்கு சென்றார். அங்குள்ள அரசு தொடக்க பள்ளியில் படிக்கும் மாணவர்களை சந்தித்தார். அங்குள்ள மாணவர்களுக்கு ஆங்கில பாடம் கற்றுக் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இதற்கு பலரும் தங்களது பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story