Ethir Neechal அதிரடியாக எண்ட்ரி தந்த குணசேகரன்..! யார் தெரியுமா?

Ethir Neechal அதிரடியாக எண்ட்ரி தந்த குணசேகரன்..! யார் தெரியுமா?
X
எதிர்நீச்சல் தொடரில் அடுத்த குணசேகரனாக எண்ட்ரி கொடுக்கிறார் வேல ராமமூர்த்தி.

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக களமிறங்கும் வேல ராமமூர்த்தி. உருவத்தை வைத்து எளிதாக கணித்த எதிர்நீச்சல் ரசிகர்கள் இதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த இயக்குநர் மாரிமுத்து காலமானார். இதனால், சீரியலின் கதையே மாறிப்போனது. மாரிமுத்து இருக்கும் வரையில் கம்பீரமாக, நகைச்சுவை உணர்வு கலந்து எதிர்நீச்சல் சீரியலையே வேறொரு கோணத்தில் கொண்டு சென்றிருந்தார். அவர் சொல்லும் எம்மா ஏய் என்பது அவரது டிரேட்மார்க் சொல்லாகி போனது.

தன் தம்பிகளுக்காக வாழ்ந்து வருவதாக நம்ப வைத்து அவர்களை அடிமையாக்கி வைத்து வேலை வாங்கும் குணசேகரனை அவரது மனைவி மற்றும் தம்பி மனைவிகள் இணைந்து எதிர்க்கிறார்கள். குடும்ப மருமகள்கள் நால்வரும் இணைந்து குணசேகரனை எதிர்க்கும் நிலையில், குணசேகரனின் தம்பிகள் ஞானசேகரன், கதிர்வேல் ஆகியோர் அவர்களுக்கு எதிராக நிற்கிறார்கள்.

அப்பத்தா மருமகள்களுக்கு பின் நின்று ஊக்கம் கொடுத்து வரும் நிலையில், குணசேகரனுடன் உண்டான மோதலில், குணசேகரன் தனது சொத்துகளை தம்பிகளின் பெயரில் எழுதிவிட்டு, எங்கோ சென்றுவிட்டார். இதற்கு காரணம் குணசேகரனின் மனைவி ஈஸ்வரி மற்றும் அவர்களது குழந்தைகளான தர்ஷன் மற்றும் தர்ஷினி இருவரும்தான் என குணசேகரனின் தம்பியான கதிர் சண்டையிட்டு கோபமூட்டுகிறான். இதனால் வேலை எதுவும் செய்யாமல் தர்ணா செய்கின்றனர் மருமகள்கள்.

தம்பிகள் அனைவரும் அவரை தேடி ஒரு வழியாக கண்டுபிடித்து இருக்கிறார்கள். அவர் இப்போது வீட்டுக்கு வர இருக்கிறார். அதற்கான புரோமோ தற்போது வெளியாகியுள்ளது.

இந்நிலையில், குணசேகரன் கதாபாத்திரத்தில் வேல ராமமூர்த்தி நடிக்கவுள்ளார். இவர் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வேல ராமமூர்த்தி குறித்து:

  • இவர் 1967 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் பிறந்தார்.
  • இவர் சென்னை நாடக அரங்கில் இருந்து தன்னுடைய நடிப்பு பயணத்தை தொடங்கினார்.
  • இவர் பல திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
  • இவர் இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என பல்துறைகளில் பணியாற்றியுள்ளார்.
  • வேல ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் எப்படி நடிப்பார் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

வேல ராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது. இவர் தனது நடிப்பால் சீரியலுக்கு புத்துணர்ச்சியை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!