காகா ராதாகிருஷ்ணன் இறந்த நாளின்று
காகா ராதாகிருஷ்ணன்
காகா ராதாகிருஷ்ணன் இறந்த நாளின்று:
நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரிய பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன்.
Funny face என்பதற்கு சரியான உதாரணம்.நல்ல குள்ளமான உருவம்.சிவாஜிகணேசனின் பால்ய நண்பன். ஆயிரம் படம் கண்ட மனோரமாவுக்கு முதல் படம் 'மாலையிட்ட மங்கை'(1958)யில் முதல் ஜோடியாக நடித்தவர். காகா ராதாகிருஷ்ணனை நினைத்தவுடன் நினைவுக்கு வரும் படம் மனோகரா(1954) அதில் சிவாஜிக்கு step brother. ஏனோ பால்ய நண்பனுக்கு சிவாஜி கணேசன் தன் படங்களில் முக்கிய கதாபாத்திரம், பெரிய வாய்ப்பே தந்ததேயில்லை. சந்திர பாபு,தங்கவேலு, நாகேஷ் போல முதல்நிலை காமெடியனாக காக்காவால் ஆக முடியவில்லை.
நடிகர் சங்கத் தலைவர் தேர்தலில் எம்.ஜி,ஆரை எதிர்த்து காக்கா ராதாகிருஷ்ணன் போட்டியிட்டவர்! இதனால் கூடவோ என்னவோ 1960களி்ல்,1970களில் திரையுலகில் சரியான, நல்ல வாய்ப்பு இல்லாமல் தான் இருந்தார். முத்துராமன்,வாணிஸ்ரீ நடித்த கே.எஸ்.ஜியின் "தபால்காரன் தங்கை'(1970) யில் தியேட்டரே கலகலக்க "காதர் பாட்சா" என்ற அவர் வசனம் பிரபலம்.
அந்தக் காலங்களில் ஏதோ தலையை காட்டுகிற சிறிய கதாபாத்திரங்கள் தான். 1992ல் ''தேவர்மகன்" படத்தில் மீண்டும் சிவாஜிக்கு தம்பியாக நடிக்க வாய்ப்பு.விசேஷமான நடிகர் காக்கா ராதாகிருஷ்ணன் என்பதை உணர்த்தினார். விசித்திரமாக கடந்த 15 ஆண்டுகள் காக்கா ராதாகிருஷ்ணனுக்கு ஓய்வு பெற வேண்டிய முதுமையில் திரை வாய்ப்புகள் கிடைத்தன! "காதலுக்கு மரியாதை" படத்தில் ஆரம்பித்து "வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்''தாண்டியும் எத்தனை படங்கள். மிக சாதாரணமான படங்கள் எதிலும், மிக சாதாரண பாத்திரத்திலும் கூட அவர் நடிப்பு சோடை போனதேயில்லை.Classic Comedian!
காகா பெயர் வந்த காரணம்…
அவரது பெயருடன் 'காகா' என் என்ற பட்டப் பெயர் ஒட்டிக் கொண்டது எப்படி என்பது குறித்து ஒரு ப்ளாஷ்பேக்.
"மங்கையர்க்கரசி' படத்தில் ஒரு டயலாக் வரும். மதுரம்மா (டிஏ மதுரம்) என்கிட்ட 'நீ அரசாங்கத்துல போய் எப்படியாவது, காக்கா பிடிச்சாவது வேலைல சேர்ந்துடு'ன்னு சொல்லுவாங்க.
உடனே நான் அம்மா சொல்லிட்டாங்களேன்னு, ஒரு காக்காவப் புடிச்சுகிட்டுப் போய் வேலை கேட்பேன். வேலை கிடைக்காது. திரும்பி வீட்டுக்கு வந்து அம்மாகிட்ட சொல்லுவேன். நீ சொன்ன மாதிரியே காக்காவப் புடிச்சுக்கிட்டு போய் வேலை கேட்டேன், அப்பவும் கிடைக்கலம்மா. இங்க பாரு காக்கா'ன்னு சொல்லுவேன். அந்த காமெடி அப்போ ரொம்ப பேசப்பட்டது. அதிலிருந்துதான் காக்கா ராதாகிருஷ்ணன்னு எல்லோரும் கூப்பிட ஆரம்பிச்சாங்க…" என்று ராதாகிருகிருஷ்ணனே சொல்லியிருந்தார்..
தகவலில் உதவி ":R P ராஜ நாயஹம்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu