இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்!🔥

இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்!🔥
X

இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்!🔥

டைரக்டர் மாரி செல்வராஜ். துருவ் விக்ரமை வைச்சு ஒரு படத்தை இயக்க தயாரா இருந்தார். அந்த படத்தினை பா ரஞ்சித் தயாரிக்கவும் ரெடியா இருந்தார். ஆனா 'அச்ச்சசோ. இந்த புள்ளையாண்டானை வச்சா எடுக்கப் போறே..? என்று ஆரம்பித்து யாராரோ ஏதேதோ சொல்லி கலைச்சிப்புட்டாய்ங்களாம். உடனே இரஞ்சித் தன் தயாரிப்பில் உருவாக இருந்த பல படங்களுக்கு பணம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டதால் இந்த படத்தை லேட்டா எடுக்கறேன்னு மெசெஜ் அனுப்பிட்டதா சேதி..

அதே சமயம் இந்த து. வி அதாங்க துருவ் விக்ரம் குழந்தையா இருந்தப்போதே அவரின் நயினா சீயான் மிகப் பெரிய ஜிம் ஒன்னை வச்சிருந்தாராம்.. அங்கேப் போய் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன் இஷ்டத்துக்கு ஒர்க் அவுட் செய்ததால் தசைகள் இறுகி சில உபாதைகளுக்கு ஆளாகி விட்டார் என்றும் அதற்க்கான ட்ரீட்மெண்ட் எடுத்த பின்னரே நடிக்க வர முடியும் -முன்னு சொல்லிட்டு துருவ் -தான் ஜகா வாங்கிட்டதாவும் இன்னொரு சேதி பரவுது.

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்