இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்!🔥

இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்!🔥
X

இன்ஸ்டாநியூஸ் சினிமா சண்டே அப்டேட்!🔥

கொஞ்சம் காஸ்ட்லியான சம்பளம் வாங்கும் டைரக்டர் லிஸ்டில் இருந்த ஷங்கரின் நிலைமை கொஞ்சம் மோசமாகி விட்ட சூழலில் ஒலக நாயகன் மட்டும் பிக் பாஸ் 5 , பாபநாசம் 2 ஆகியவற்றுடன் விக்ரம் டிஸ்கசனிலும் பிசியா இருக்காராம். இதில் முதலில் கமல் எதை ஆரம்பிப்பார் என்று விசாரித்தால் 'தெர்லே-ண்ணா.. ரைட்-டுலே சிக்னல் போட்டுகிட்டு,த லெப்ட்-டுலே கைக் காட்டிக்கிட்டே ஸ்ட்ரைட்டா போயிகிட்டிருக்கார்.. 'அப்படீங்கறாய்ங்க..

அதே சமயம் லைகா நிறுவனம் தயாரிப்பில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உட்பட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்துல உருவாகிட்டு வர்ற படம் இந்தியன் 2. இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு வருடத்துக்கும் மேலாக நடக்காமல் தேங்கி நிற்கிறது. இதுனாலே அப்செட்டான ஷங்கர் இரண்டு படங்களில் கமிட் ஆகி பிசியாக திட்டமிட்டார் ஒன்னு, ராம்சரண் நடிக்க தில்ராஜு தயாரிப்பில் PAN இந்தியா திரைப்படம். இன்னொன்று அந்நியன் படத்தின் இந்தி ரீமேக். இவ்விரண்டு படங்களையும் உடனடியாகத் தொடங்க திட்டமிட்ட நேரத்தில், லைகா சுதாரித்து, கோர்ட்டுக்கு போன சூழலில் எல்லாம் குழப்பமாகி ஷங்கர் நூடில்ஸ் ஆயிட்டாராம்..

இதைக் கேள்விப்பட்ட உலக உருண்டை வெள்ளுடை வேந்தர் தலையிட்டு இந்தியன் 2-ஐ தொடர வழி செஞ்சுட்டுதாவும், அரசின் அனுமதிக் கிடைச்சதும் தாத்தா அரைகுறையா பிரசவமாயிடுவாருன்னு கோலிவுட் மாஃபியாகள் சியர்ஸ் சொல்லி சத்தியம் பண்றாய்ங்க

Next Story
மாஜி அதிமுக பொறுப்பாளர் வாபஸ், செந்தில்முருகன் விளக்கம்