சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா படம் இல்லையாம் - சாதாரண நித்யா நந்தா பற்றிய படம் தானாம்
நித்யா நந்தா படத்தின் பேரைக் கேட்டதும் ஒரு வேளை அந்த நித்யானந்தா வரலாறாக இருக்குமோ அப்படின்னு நெனைக்குறாங்களாம். அது பத்தி விளக்கம் கொடுத்தார் இயக்குநரு.
காதலைத் தேடி நித்யா நந்தா திரைப்படம் பற்றி ஆதிக் ரவிச்சந்திரன் ரசிகர்கள் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க நம்மிடம் படம் பற்றி பகிர்ந்துள்ளார். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் ஜீ.வி. பிரகாஷ் இணையும் படம் நித்யா நந்தா. இப்படம் ஃபேன்ண்டசி திரைப்படமாக தயாராகிறது வருதாம்
இப்படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டதிலிருந்து இது சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தாவைப் பற்றிய படமோ என கேள்வி எழுந்தது. ஆனால், இது நித்யானந்தா பற்றிய படமல்ல நித்யா, நந்தா என்ற இருவரைப் பற்றிய படம் என ஆதிக் ரவிச்சந்திரன் விளக்கமளித்துள்ளார். இப்படத்தில் பாலிவுட் நடிகை அமைரா தஸ்த்துர் நடிக்கிறார். படத்தின் அறுபது சதவிகித படப்பிடிப்பு முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா திரைப்படம் விமர்சனத்திற்குள்ளானாலும், மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதேபோல் இப்படமும், இளைஞர்களுக்குத் தேவையான பல விஷயங்களைக் கொண்ட திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜீவி.பிரகாஷுக்கு அடுத்ததாக ராஜிவ் மேனனின் இயக்கத்தில் சர்வம் தாள மயம் மற்றும் வசந்தபாலனின் இயக்கத்தில் ஜெயில் ஆகிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu