தமிழ்நாடு முழுவதும் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

தமிழ்நாடு முழுவதும்  உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
X

தமிழ்நாடு முழுக்க நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

ஊரடங்கினால் வாழ்வாதாரத்தை இழந்திருக்கும் திரைப்பட மற்றும் நாடக நடிகர்களுக்கு உதவும் வகையில், தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ்.முருகன் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி,முன்னணி நடிக, நடிகைகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தவர், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு பகுதி பகுதியாக நிவாரண பொருட்கள் வழங்கி வருகிறார்.

இதுவரை சென்னையில் பல கட்டமாக சுமார் ஆயிரம் உறுப்பினர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்து தமிழ்நாடு முழுக்க இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு உதவிகள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக மதுரையில் சுமார் 200 உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. அடுத்து திண்டுக்கல், திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகள் பூச்சி முருகன் ஏற்பாட்டின் பேரில் வழங்கப்பட்டது.

நடிகர் சங்க உறுப்பினர்கள் முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொண்டனர்.

இதுவரை சுமார் 1800 உறுப்பினர்களுக்கு மேல் உதவி வழங்கப்பட்டுள்ளதாம்.

ஹூம்ம். சினிமா பத்திரிகையாளர்களுக்கு உதவ யாருக்குமே நேரமில்லை என்பது சோகம்தான்

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!