கிரேசி மோகன் காலமான நாளின்று

கிரேசி மோகன் காலமான நாளின்று
X

கிரேசி மோகன் 

கிரேசி மோகன் காலமான நாளின்று அவர் மறைந்த நாளன்று எங்களது அஞ்சலிச் செய்தி--இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக இதோ:

நான் விகடன் எடிட்டோரியலில் இருந்த போது எனக்கு ஒதுக்கப்பட்ட கேபினில் இரா.வேலுச்சாமி மற்றும் பாலா என்னும் சினிமா ரிப்போர்ட்டர் ஆகியோர் இருந்தனர்.. நாங்கள் மூவருமே ஸ்மோக்கிங் ஹேபிட் உள்ளவர்கள் என்பதால் முதல் நாளே ரொம்ப நெருக்கமாகி விட்டோம். வேலுச்சாமியை விட பாலா ரொம்ப நகைச்சுவை ஏற்படுத்துபவர். இவர்தான் அந்த காலத்தில் நடிகர், நடிகைகளை எல்லாம் வீதிக்கு அழைத்து வந்து ஸ்பெஷல் ரிப்போர்ட் அளித்தவர்.

அவரவர் பணியை செய்தபடி அளப்பறை செய்து கொண்டிருந்த எங்கள் கேபினில் திடீரென்று மிகப் பெரிய டேபிள் மற்றும் பிரமாண்டமான சேர் எல்லாம் வந்தன. அதைப் பார்க்கும் போதே தெரிந்தது – வர்ப் போகிறவர் கொஞ்சம் மேலிட செல்வாக்கு மிகுந்தவர் என்று புரிந்தது. ஆனால் வரப் போவது யார் என்பதை சொல்ல மறுத்து விட்ட நிலையில் வந்தவமர்தவர் தான் -கிரேஸி மோகன்.

எங்கள் மூவரின் ஸ்மோக்கிங்-கைக் கண்டு கொள்ளாமல் வெத்தலை சீவல் போட்டப் படி பேசினார்.. பேசினார்.. பேசிக் கொண்டே இருந்தார். போரடிக்கும் போது எழுதிக் குவிப்பார்.. ஒரு முழு ஷீட்டில் இருபது முதல் முப்பது வார்த்தைகள்தான் இருக்கும். அவர் எழுதியதில் உள்ள சிரிப்புகளை மிக சரியாக கண்டறிந்து ஜூ.வி & விகடனில் பிரசுரித்து வந்தார் எம் எடி பாலு, அதில் ஒன்று கேபிடி சிரிப்பு ராஜ சோழன். (அந்த தொடரில் சிரிப்பு எங்கே ஒளிந்திருக்கிறது என்று கண்டு பிடிக்கும் போட்டி நடத்தி அதற்கு கிரேஸியையே பொறுப்பேற்க வைத்திருக்கிறோம் என்பது தனிக் கதை). நேத்திக்கு கேட்ட அதே கேள்வியை இன்னிக்கு கேட்டாலும் நேத்திக்கு சொன்ன அதே பதிலை அட்சரம் பிசகாமல் சொல்வார். அப்படி சொல்வதில் மிளிரும் ஒத்தை காமெடிக்காக ஒரே கேள்வியை ஒரே நாளில் பல தடவை அவரிடம் கேட்டிருக்கிறோம். அதனாலெல்லாம் சலிப்போ டவுட்டோ இல்லாமல் அதே பதிலை சொல்வார் கிரேஸி.

சுமார் இரண்டு ஆண்டுகள் அவர் எழுதிய ஒரிஜினல்களின் பண்டல்களை வைக்க தனி கேபின் தேவைப் பட்டது. இடையிடையே தன் என்ஜினியரிங் டிகிரியின் போது படித்த அனுபவங்களைச் சொல்லும் போது நிஜமாகவே சிரிப்பு வரும். உண்மையில் இவர் வரைவதில்தான் ஆர்வம் கொண்டிருந்தார். காலச் சூழல் அவரை எழுத்தாளனாக்கி விட்டது என்பார். தனக்கு கிரேஸி என்ற அடைமொழி வந்தது குறித்து 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகத்தை ரங்காசாரி மோகன் என்ற என்னுடைய பெயரில்தான் எழுதினேன். அதே சமயம் நான் ஒருமுறை 'கரிகாலா கரிகாலா' என்ற சிறுகதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன்.

அது அச்சிடப்பட்டு வெளி வந்தபோது கதையை எழுதியது 'கிரேஸி மோகன்' என்று அறிமுகமில்லாத பெயராக இருந்தது. அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. உடனே, ஆனந்த விகடனின் ஆசிரியர் இலாகாவில் இருந்த வி.ஸ்ரீனிவாசன் அவர்களிடம், 'எதற்காக என் பெயரை இப்படி போட்டுள்ளீர்கள்?' என்று கேட்டேன். அதற்கு அவர், "இப்போதிலிருந்து உன்னுடைய பெயர் 'கிரேஸி மோகன்' என்பதுதான்" என்று கூறினார். என்னுடைய இயற்பெயரை என் தாத்தா வைத்தார். என் திரைப்பெயரை ஆனந்த விகடன் வைத்தது'என்று சொன்னார்.

அது போல் உங்கள் படைப்பில் பெண் கதா பாத்திரத்தின் பெயர் ஜானகி என்று இருப்பது ஏன்? என்று கேட்ட போது 'ஜானகி என்பது என்னுடைய முன்னாள் காதலி அல்லது என்னுடைய மனைவி என்று எல்லோரும் நினைத்திருப்பார்கள். ஆனால், ஜானகி என்பது எனக்கு நாடகம் கற்றுத்தந்த பள்ளி ஆசிரியையின் பெயர். என்னுடைய ஆறாவது வயதில் அவர்தான் எனக்கு நாடகத்தின் நுணுக்கங் களைக் கற்றுத்தந்தார். பள்ளியில் நடந்த நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் நான் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். நாடகத்தின் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட அவரும் ஒரு முக்கிய காரணம். அதனால்தான் அவருக்குக் கொடுக்கும் குரு தட்சணையாக, அவருடைய பெயரை என்னுடைய நாடகத்தில் உபயோகிக்கிறேன்' என்றார்.

பின்னர் பல ஆண்டுகள் கழித்து மதன் சாரின் மகள் மேரேஜ் ரிசப்ஷனில் சந்திக்க நேர்ந்த போது என்னை கண்டு புன்முறுவல் பூத்தார். அதில் பழைய சீவல் அடித்தது.வேற லெவல்..

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி