இன்ஸ்டாநியூஸ் சினிமா ஞாயிறு அப்டேட்ஸ்🔥
சினிமா கிசு கிசு
தி பேமிலிமேன் 2 ரோலில் நடித்த @சமந்தா சமாளிப்பும், இத்தொடர் சொல்லும் கதையும் குறித்து நம்ம #இன்ஸ்டாநியூஸ் சினிமா ஞாயிறு அப்டேட்ஸ்🔥 ஸ்பெஷல் ரிப்போர்ட்
ராஜ், டிகே இயக்கத்தில், மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, சமந்தா நடித்து, ஹிந்தியில் உருவான, 'தி பேமிலி மேன் - 2' வெப் சீரிஸ்க்கு டிரைலர் வெளியான நாள் முதல் கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதில், ராஜி என்ற தமிழ் பேசும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். இதன் கதை 'விடுதலைப் புலி' ஒருவரை, ஐஎஸ் கொன்றுவிடுகிறது.
இந்த கொலைக்கு, இந்திய அரசு தான் காரணம் என புலிகளின் தலைவரை நம்ப வைக்கிறது, அதற்கு பழிவாங்க வேண்டும் என்று நினைக்கும் புலிகளின் தலைவரை வைத்தே தாக்குதலுக்கு திட்டமிடுகிறது. தான் பயன்படுத்தப் படுகிறோம் என்பது தெரியாமல், அந்த தலைவர், இயக்கத்தை விட்டு வெளியேறி, தனது படைத் தளபதிகளை வைத்து விஷயத்தை நடத்தப் பார்க்கிறார். இந்த தாக்குதலை, ஃபேமிலி மேனான, மனோஜ் தடுத்து நிறுத்துவது தான் கதை.
இதில் புலிப்படையச் சேர்ந்தவர் போல் நடித்திருப்பவர் சமந்தா.. இவர் ரோல் பயங்கரவாதி என்பதை அவரே தெரியாதது போலவும், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு உள்ளதெல்லாம் தெரியாதது போல் காட்டியுள்ளனர்.
குறிப்பாக, பலக் காட்சிகளில் தமிழர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் நம் தமிழக அரசு தொடங்கி நாம் தமிழர் கட்சி, வைகோ , திருமா உட்பட பல தமிழ் அமைப்புகள் இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என குரல் கொடுத்துவந்தனர். ஆனால் ஈழத் தமிழர்களை இழிவுபடுத்தி எடுக்கப்பட்ட இந்த, 'தி பேமிலி மேன் - 2' வெப் சீரிஸ் பல எதிர்ப்புகளை மீறி 'அமேசான் ப்ரைம்' ஓ.டி.டி., தளத்தில் வெளியாகி போச்சு. இது பலருக்கும் இன்னும் கோபத்தை அதிகப்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இத்தொடரையும், அமேசான் ஓடிடி தளத்தையும் விமர்சித்து பலரும் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், 'தமிழர்களின் உணர்வை புண்படுத்தும் 'தி பேமிலி மேன் 2' இணையத்தொடர் ஒளிபரப்பை நிறுத்தாவிட்டால் அனைத்து அமேசான் சேவைகளையும் உலகத்தமிழர்கள் புறக்கணிப்போம்,' என எச்சரிக்கை விடுத்ததுடன், அமேசான் ப்ரைம் தலைமை அதிகாரி அபர்ணா புரோகித்துக்கு கடிதமும் எழுதியுள்ளார்.தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பேமிலி மேன்-2 தொடர் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக FamilyMan2_against_Tamils, BoycottAmazon, Raji, LTTE, போன்ற ஹேஸ்டேக்கில் பலரும் தங்கள் எதிர்ப்புகளை பதிவிட்டு டிரெண்டாக்கி வருகின்றனர்.
இதுக்கிடையிலே சமந்தா இந்த எதிர்ப்பை கிஞ்சித்தும் பொருட்படுத்தாமல், "எங்கெங்கிருந்தோ வரு விமர்சனங்களையும், பின்னூட்டங்களையும் படிக்கும்போது என் இதயத்தில் மகிழ்ச்சி நிறைகிறது. ராஜி என்றுமே விசேஷமான கதாபாத்திரமாக இருக்கும். ராஜ் & டிகே இந்த ரோலில் நடிக்க என்னை அப்ரோச் செஞ்ச போது, இதில் நடிப்பதற்கு உணர்வுபூர்வமாக, சமநிலையுடன் தயாராக வேண்டும் என்பது எனக்குப் புரிந்தது.
அவிய்ங்களே ஈழத் தமிழர்களின் ஆவணப் படங்களை க்ரியேட்டிவ் அணியினர் என்னிடம் பகிர்ந்தனர். அதில் ஈழப் போரில் பெண்களைப் பற்றிய கதைகளும் இருந்தன. நான் அந்த ஆவணப்படங்களைப் பார்த்தபோது, நீண்டகாலமாக ஈழத் தமிழர்கள் அனுபவித்த பிரச்சினைகளையும், சொல்ல முடியாத துயரங்களையும் அனுபவித்தது தெரிந்து எனக்குத் திகைப்பும், அதிர்ச்சியும் ஏற்பட்டுச்சு. ஆனா அந்த டாக்குமெண்டரி படங்களுக்கு சில ஆயிரம் பார்வைகளே இருந்ததை நான் கவனித்தேன்.
அப்போதுதான், ஆயிரக்கணக்கான ஈழ மக்கள் அவர்களின் உயிரை இழந்தபோது உலகம் எப்படி அந்தப் பக்கமே தன் கவனத்தைத் திருப்பலை என்பது எனக்கு உறைத்தது. இன் னும் லட்சக்கணக்கானோர் வாழ்வாதாரத்தையும், வீடுகளையும் இழந்தனர். இந்த உள்நாட்டுப் போரின் காயங்களை மனதில், எண்ணத்தில் தாங்கி, கணக்கிலடங்காத இன்னும் பலர் தூர தேசங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இதையெல்லாம் ஃபீல் பண்ணி ராஜியின் கதை கற்பனை என்றாலும், அது நியாயமற்ற முறையில் நடந்த போரில் உயிரிழந்தவர்களுக்கும், போரின் வலியோடு, அந்த நினைவுகளோடு வாழ்பவர்களுக்கும் ஓர் அஞ்சலி. ராஜியின் கதாபாத்திரம் சமநிலையுடன், நுணுக்கத்துடன், உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.
முன்னெப்போதையும்விட, வெறுப்பு, ஒடுக்குமுறை, பேராசை ஆகியவற்றை மனிதர்களாகிய நாம் ஒன்றிணைந்து எதிர்க்கும், ராஜியின் கதை தெளிவான, மிகத் தேவையான ஒரு நினைவூட்டலாக இருக்க வேண்டும் என்று விரும்பினேன். இதில் நாம் தவறினால் இன்னும் கணக்கிலடங்காத பலர் அவர்களின் அடையாளத்தை, சுதந்திரத்தை, சுயமாக முடிவெடுக்கும் உரிமையை இழப்பார்கள்". - அப்ப்டீன்னு வாங்குன காசுக்கு கொஞ்சம் ஓவரா கூவி இருக்காப்டி
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu