இயக்குநர் பாலுஆனந்த் மறைந்த தினம்..

இயக்குநர் பாலுஆனந்த் மறைந்த தினம்..
X

இயக்குநர் பாலுஆனந்த்

இயக்குநர் பாலுஆனந்த் கோவையில் பிறந்தார்.அவரது மனைவி உமா மகேஸ்வரி அவருக்கு ஸ்ரீவேலுமணி என்ற மகளும் ஸ்ரீசரவணன் என்ற மகனும் இருக்கிறார்கள்.

பல ஆயிரம் ரசிகர்கள் இன்றும் ரசிக்கும் விஜயகாந்த் நடித்த நானே ராஜா நானே மந்திரி படத்தை இயக்கியவர் பாலு ஆனந்த். சத்யராஜ் நடித்த அண்ணாநகர் முதல் தெரு படத்தையும் இவர்தான் இயக்கினார். ரசிகன் ஒரு ரசிகை, உனக்காகப் பிறந்தேன், பொட்டுவச்ச நேரம், ராஜாதிராஜ ராஜமார்த்தாண்ட காத்தவராயன், சிந்துபாத் போன்ற படங்களும் இவர் இயக்கியதுதான். கடைசியாக பவர்ஸ்டார் சீனிவாசனை வைத்து ஆனந்த தொல்லை என்ற படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் நீண்ட நாட்களாக வெளியாகாமல் உள்ளது.

இவர் இயக்குநராக அறியப்பட்டதை விட நடிகராகத்தான் பலருக்கும் தெரியும். முழு நேர நடிகராக மாறிய அவர், வானத்தைப் போல உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை, வில்லன், குணச்சித்திர நடிகராக நடித்தார்.

'ராஜாதி ராஜா,' 'வானத்தைப்போல,' 'மனிதன்', 'மனைவிக்கு மரியாதை', 'காந்தி பிறந்த மண்', 'தினமும் என்னைக் கவனி', 'பிஸ்தா', 'தினமும் என்னைக் கவனி' உள்பட 100 படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்தும் இருக்கிறார்.

பாலு ஆனந்துக்கு சொந்த ஊர் கோவை. இயக்குநர் ஆர் சுந்தர்ராஜனிடம் பயணங்கள் முடிவதில்லை படம் தொடங்கி 28 படங்களில் உதவியாளராக இருந்து பின்னர் இயக்குநரானார்.

சொந்த ஊரிலிருந்த பாலு ஆனந்துக்கு கடந்த 2016 ஜூன் 3 ம் தேதி அதிகாலை திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை செல்லும்போதே அவர் உயிர் பிரிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.அப்போது அவருக்கு வயது 62

Next Story
புதுமண தம்பதிகளே..! தேனும் எள்ளும்...! நம்பவே முடியாத அளவுக்கு அற்புதங்கள்..! என்னன்னு தெரிஞ்சிக்கணுமா?