புதுமணத் தம்பதிகள் நயன்தாரா - விக்னேஷ் சிவன்… எங்கே..?

புதுமணத் தம்பதிகள் நயன்தாரா - விக்னேஷ் சிவன்… எங்கே..?
X

விக்னேஷ் சிவன்- நயன்தாரா

தானும் நயன்தாராவும் சென்றுள்ள ஹனி மூன் ட்ரிப் படங்களை இன்ஸ்டா மற்றும் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

ஜூன் மூன்றாம் தேதி உலகமெங்கும் வெள்ளித்திரையில் வெளியாகிய நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' படம் பிரமாண்ட வெற்றியாகத் தன் கொண்டாட்ட ஓட்டத்தைத் தொடங்கியது. இப்போதுவரை தினந்தோறும் புதுப்புது தகவல்களுடன் சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் 'விக்ரம்' குறித்த தகவல்களே நிரம்பி வழிகின்றன. பத்திரிகை, ஊடகங்களிலும்தான்.

இதனிடையே, ஜூன் ஒன்பதாம் தேதி மாமல்லபுரத்தில் நிகழ்ந்த நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் குறித்த செய்திகள், 'விகரம்' ஆக்ரமித்த அனைத்து இடங்களிலும் இடம்பெற்று பரபர பேசுபொருளாயின. இன்னும் ஒருபடி மேலேபோய் திருமணத்தைத் தொடர்ந்து ஐந்தாறு நாட்களுக்கும் மேலாக நயன் - விக்கி திருமணச் செய்திகள் 'விக்ரம்' செய்திகளின் வேகத்தையே ஓவர்டேக் செய்தது எனலாம்.

இந்தநிலையில், திருமணத்துக்குப் பிறகு திருப்பதி விசிட். வெங்கடாஜலபதி தரிசனம்.. கோயில் வளாகத்தில் போட்டோஷூட்.. போட்டோஷூட் விவகாரம் சர்ச்சையாகி பின் அதனை சரிப்படுத்திவிட்டு, சென்னையில் பத்திரிகையாளர் மற்றும் ரசிகர் சந்திப்பு என்று அடுத்தடுத்து பிஸி ஷெட்யூல்களை முடித்து இப்போது புதுமணத் தம்பதிகளான நயன்தாரா - விக்னேஷ் சிவன் எங்கே..? என்று எழுந்த கேள்விக்கு, தனது இன்ஸ்டாகிராம் போட்டோ போஸ்ட் மூலம் பதிலை உணர்த்தியுள்ளார் விக்கி.

ஆம்.. புதுத் திருமணத் தம்பதிகள் தற்போது தாய்லாந்து ட்ரிப்பில் ஹனி மூன் கொண்டாட்டத்தில் உள்ளனராம். அந்த ஹாப்பி மூவ்மெண்ட் போட்டோக்களை இன்ஸ்டா ட்விட்டர் என சமூகவலைத் தளங்களில் பதிவிட்டுள்ளார் விக்கி.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!