Bigg Boss Season 6: பிக்பாஸ் சீசன் 6ல் அடுத்த அசல் கோலார் உதயமா?

Bigg Boss Season 6: பிக்பாஸ் சீசன் 6ல் அடுத்த அசல் கோலார் உதயமா?
X

ஜனனியின் காதை கிள்ளும் ராம்

Bigg Boss Season 6-ஜனனியிடம் அத்துமீறியதாக ராமை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்

Bigg Boss Season 6 -விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நடைபெற்ற வரும் இந்த நிகழ்ச்சி இதுவரை 5 சீசன்கள் முடிநதுள்ளது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சியில் திரைத்துரை மற்றும் சமூக வலைதளங்களில் பிரபலங்களாக உள்ளவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

நடிகர் அஸிம், விஜய் டிவியில் காமெடியில் கலக்கிய அமுதவாணன், சோஷியல் மீடியா பிரபலம் ஜிபி முத்து, ராபர்ட் மாஸ்டர், அசல் கொலார், ப்த்திரிக்கையாளர் விக்ரமன், கிரிக்கெட் வீரரும் மாடலுமான ராம் ராமசாமி சின்னத்திரை நடிகை ரக்ஷிதா, மைனா நந்தினி, மெட்டி ஒலி சாந்தி, மாடல் அழகி ஆயிஷா, ஷிவின் கணேசன் என்கிற திருநங்கை, மாடல் அழகி ஷெரீனா, இலங்கையைச் சேர்ந்த தொகுப்பாளினி ஜனனி ஆகியோர் பங்கேற்கின்றனர்

பிக் பாஸ் வீட்டில் இருந்து கடந்த வார இறுதியில் அசல் கோளாறு எலிமினேட் செய்யப்பட்டார். அவர் வீட்டில் பல பெண்களை அனுமதி இல்லாமல் தொடுவது உள்ளிட்ட பல விஷயங்களை செய்தது சர்ச்சை ஆன நிலையில் எலிமினேட் செய்யப்பட்டார்.

அவர் வெளியே போனதற்கு நிவாஷினி தான் கதறி கதறி அழுதார். அதை பார்த்து நெட்டிசன்களும் அவரை விமர்சித்து வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது அசல் செய்த அதே வேலையை இன்னொரு போட்டியாளர் தொடங்கி இருக்கிறார். ராம் ராமசாமி தான் அது.

இந்த பிக்பாஸ் வீட்டில் ஜனனி மற்றும் ராம் ஆகியோர் அண்ணன் தங்கை போல பழகி வருவதாக கூறப்படுகிறது. அவர் ஜனனியிடம் எல்லைமீறும் வீடியோவை வெளியிட்டு நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.

இவ்வளவு நாளும் அசலும் நிவாசினியும் பழகியவிதத்தில் அவர்கள் இருவரும் காதலர்கள் என்று பேசிவந்த நிலையில் அவர்களின் காதல் வாழ்க்கைக்கு ரசிகர்கள் முற்றுப்புள்ளி வைத்தார்கள்.

இவ்வாறு இருக்கையில் இலங்கையில் இருந்து வந்த ஜனனி பெரும்பாலான போட்டியாளர்களோடு பழகாமல் சில பேரோடு மட்டுமே பேசி வருகின்றார். தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் ஜனனியோடு ராம் பேசிய வீடியோ வெளிவந்துள்ளது.

அதாவது ஜனனி இருந்து கொண்டு இருக்கையில் அவரின் கன்னத்தை பிடிக்க ராம் படாத பாடு படுகின்ற இந்த வீடியோவை ரசிகர்கள் பார்த்து விட்டு ஜனனிக்கும் காதல் பத்திக்கிச்சு போல எனக் கூறி வருகிறார்கள்.

அத்தோடு அசல்-நிவாசினியை தொடர்ந்து ஜனனிக்கும் ராமிற்கும் காதலா என கேள்வி கேட்டு வருகிறார்கள்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story