பணத்தைக் கேட்கும் நெட்ஃபிலிக்ஸ்... பதற்றத்தில் நயன்தாரா..!

பணத்தைக் கேட்கும் நெட்ஃபிலிக்ஸ்... பதற்றத்தில் நயன்தாரா..!
X
நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பாமல் பின்வாங்கிய ஓடிடி நிறுவனம், நயன்தாராவிடம் பணத்தைத் திருப்பிக் கேட்கிறதாம்.

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர ரிசார்ட்டில் நடந்தது. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பிரபலங்கள் மட்டுமே திருமண நிகழ்வில் பங்கேற்றனர்.

குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ஷாருக்கான், இயக்குநர் மணிரத்னம், நடிகர் விஜய் சேதுபதி, நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகா, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன், ராதிகா சரத்குமார், ஷாலினி அஜித்குமார் என வெகுசிலர் மட்டுமே நயன் - விக்கி திருமணத்தில் கலந்துகொண்டனர்.

ஆனால், திருமணத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனடிப்படையில், திருமண அரங்குக்குள் யாருக்குமே செல்போன் கொண்டுவர அனுமதிக்கப்படவில்லை. இதனால், யாரும் செல்ஃபி எடுத்துக் கொள்ளவோ திருமண நிகழ்வைப் புகைப்படம் எடுக்கவோ தடைசெய்யப்பட்டது.

இந்த அத்தனைக் கட்டுப்பாடுகளுக்கும் காரணம், தனியார் ஓடிடி நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் திருமண நிகழ்வை தங்களது தளத்தில் ஒளிபரப்ப நயன்தாரா - விக்னேஷ் சிவனுக்கு 25 கோடி ரூபாய் பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்து கொண்டதுதானாம். இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் திருமண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தங்களைத் தவிர வேறு யாரும் வெளியிடக்கூடாது என்பதுதான் ஓடிடி தள ஒப்பந்தத்தின் முக்கியக் குறிப்பாகும்.

இந்தநிலையில், ஒப்பந்தத்தை மீறி விக்னேஷ் சிவன் தங்களது திருமணம் முடிந்து 30 நாட்கள் ஆனதைக் கொண்டாடும் வகையில் தனது சமூக வலைத்தளத்தில் ரஜினி, மணிரத்னம், விஜய்சேதுபதி, சூர்யா, ஜோதிகா, ஷாருக்கான், அனிருத் போன்றோர் திருமணத்தில் கலந்துகொண்ட புகைப்படங்களை நாள்தோறும் ஒவ்வொன்றாக வெளியிட்டார். இது நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி நிறுவனத்தை அதிகம் டென்ஷனாக்கியது.

இதனைத்தொடர்ந்து, நயன்தாரா திருமணத்தை ஒளிபரப்பும் முடிவிலிருந்து பின்வாங்கியது. இந்தநிலையில் தற்போது, தாங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு ஓடிடி நிறுவனம் நயன் - விக்கிக்கு அறிவித்துவிட்டதாம். நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் பணத்தைத் திருப்பிக் கேட்டதைத் தொடர்ந்து நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பதற்றத்தில் உள்ளனராம்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!