ரஜினியை இயக்கும் நெல்சன்..!

ரஜினியை இயக்கும் நெல்சன்..!
X

பைல் படம்.

இயக்குநர் நெல்சன் தனது அடுத்தப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்குகிறார்.

நடிகர் கமல்ஹாசன் 'விக்ரம்' வெற்றிப்படத்தை கொடுத்ததையடுத்து, நடிகர் ரஜினிகாந்த்தின் ரசிகர்கள், ரஜினியின் அடுத்த படத்தை ஆவலோடு எதிர்பார்த்திருக்கின்றனர். அதிலும், 'விக்ரம்' படத்தைக்காட்டிலும் கூடுதலாகப் படத்தைப் பற்றி எல்லோரும் பேச வேண்டும் என்றும் ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஏகத்துக்கும் எகிறுகிறது.

ரஜினியும் பல்வேறு இயக்குநர்களிடம் கதைகளைக் கேட்டுவிட்டு, இறுதியாக இயக்குநர் நெல்சன் திலீப்குமாருக்கு ஓகே சொல்லியுள்ளார். இதனைத் தொடர்ந்து படவேலைகள் சுறுசுறுப்படையத் தொடங்கியுள்ளன.

நடிகர் ரஜினிகாந்த்தை இயக்கும் நெல்சனின் படத்தில் கே.எஸ். ரவிக்குமாரின் முக்கியப் பங்களிப்பும் இருக்கிறது என்கிறார்கள்.

இது ரஜினிகாந்த்தின் 169வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க அனிருத் இசையமைக்கிறார். 'பீஸ்ட்' படத்திற்கு பிறகு நெல்சன் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இணையும் இரண்டாவது படம் இதுவாகும். ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்க இருப்பதாகக் கூறுகிறார்கள்.

இந்தநிலையில், படம் நெல்சன் பாணியில் முழுக்க முழுக்க நகைச்சுவையை மையப்படுத்தி கமர்ஷியலாக இருக்கும் என்பது ரஜினிகாந்த்தின் நகைச்சுவை நடிப்புக்கு நீண்டநாட்களுக்குப் பிறகு கிடைத்திருக்கும் பெருந்தீனி என்கிறார்கள், கோலிவுட் வட்டாரத்தில். திரைக்கதையின் இறுதி வடிவத்தில்தான் கே.எஸ். ரவிக்குமாரும் இணைந்திருக்கிறார். நெல்சன் திரைக்கதையில் அவரது பங்களிப்பும் இருக்கிறதாம்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!