விருது விழாவில் அவமானப்படுத்தப்பட்ட நெல்சன்! என்னாச்சு?

விருது விழாவில் அவமானப்படுத்தப்பட்ட நெல்சன்! என்னாச்சு?
X
ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகவேண்டும். பீஸ்ட் படம் தோல்வி என்ற ஒரே காரணத்துக்காக இவரை இப்படி கஷ்டப்படுத்தியது மிகப் பெரிய தவறு என்றும் பேசி வருகின்றனர்.

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களைக் கொடுத்து தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இயக்குநர்களுள் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர் நெல்சன் திலீப் குமார். இவர் பீஸ்ட் படத்தை இயக்கவே இந்தியா முழுவதும் பேசப்படும் இயக்குநராக மாறினார். ஆனால் பீஸ்ட் பட ரிலீஸுக்கு பிறகு இவரை கலாய்த்து பலரும் பேச ஆரம்பித்தனர். இந்நிலையில்தான் பீஸ்ட் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது. விஜய் பட இயக்குநர் என்பதால் பேசப்பட்டதை விட அதிக பேச்சுக்களை பெற்றார் நெல்சன். அதுவும் கிளைமேக்ஸ் காட்சிக்காக பலரும் அவரைக் கலாய்த்து தொங்க விட்டனர்.

இதன் காரணமாக அவர் ஒப்பந்தமாகியிருந்த ரஜினி படத்திலிருந்து நீக்கப்படுவார் என்கிற தகவலும் வெளியானது. ஆனால் சிலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ரஜினிகாந்த் படத்தை நெல்சன் இயக்குவது உறுதி செய்யப்பட்டது. சில மாதங்களில் ஷூட்டிங் சென்று படத்தை வெற்றிகரமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் நெல்சன்.

இரண்டு வாரங்களில் ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் முடிவடைய உள்ள நிலையில், சமீபத்தில் ஆனந்த விகடன் விருதுகள் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டிருந்தார் நெல்சன். அவருக்கும் மற்றவர்களுக்கு கொடுக்கப்பட்ட தடபுடல் வரவேற்பு இருக்கும் என எதிர்பார்த்திருந்த நிலையில், அவரை வரவேற்க கூட ஆள் இல்லாமல் தனியே நடந்து போனது பார்ப்பவர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.


அதே விழாவுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வரும்போது அவரைச் சுற்றிக் கொண்டு புகைப்படம் எடுக்கும் பலர் இருக்கின்றனர். மேலும் பவுன்சர்களும் அவரின் பின்னால் அணி வகுக்கின்றனர். மேடை இருக்கும் பகுதி வரை இவர்கள் லோகேஷை சுற்றிக் கொண்டே செல்கிறார்கள். ஆனால் நெல்சன் வரும்போது அவரை கண்டுகொள்ளாமல் இருக்கிறார்கள். பாதி தூரம் வந்துவிட்டு இதோ இந்த வழியில் செல்லுங்கள் என்று கூறிவிடுகிறார்கள்.

இதில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்தான் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என இணையதளத்தில் பேச்சு எழுந்துள்ளது. ஒரு விருந்தினரை வரவேற்கும் முறை இதுதானா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் நெல்சன் திலீப்குமாருக்காக இரங்கி பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஜெயிலர் திரைப்படம் நிச்சயம் பெரிய ஹிட் ஆகவேண்டும். பீஸ்ட் படம் தோல்வி என்ற ஒரே காரணத்துக்காக இவரை இப்படி கஷ்டப்படுத்தியது மிகப் பெரிய தவறு என்றும் பேசி வருகின்றனர்.

Tags

Next Story
ராசிபுரம் அருகே இரு சமூகத்தினர் மோதல்- போலீசார் குவிப்பு..!