ரஜினி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் - 'ஜெயிலர்' கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியீடு!
Rajinikanth’s Jailer movie glimps video at soon - ரஜினி ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ் - ‘ஜெயிலர்’ கிளிம்ப்ஸ் வீடியோ விரைவில் வெளியீடு!
Rajinikanth's Jailer movie glimps video at soon - இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள 'ஜெயிலர்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ள நிலையில், அந்த படத்தின் வீடியோ முன்னோட்டமான கிளிம்ப்ஸ், விரைவில் வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்து உள்ளன.
ரஜினி நடிப்பில் சமீபத்தில் வெளியான 'அண்ணாத்த' படம் சரியாக ஓடாத நிலையில், கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட வெற்றிப்படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் உடன் ரஜினிகாந்த் இணைந்து உள்ளார்.
Rajinikanth's Jailer movie glimps video at soon - இந்நிலையில், நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'பீஸ்ட்' படம் சறுக்கியதால், தனது அடுத்த படத்தை வெற்றிப்படமாக உருவாக்கும் முயற்சிகளில் அதீத ஈடுபாட்டு காட்டி வருகிறார்.
ரஜினி உடன் அடுத்த படம் என்பது உறுதியாகி உள்ள நிலையில், அதற்கு 'ஜெயிலர்' என்று பெயரிட்டு உள்ளனர். இந்த படத்தை வெற்றிப் படமாக உருவாக்கும் நடவடிக்கையாக கதை மற்றும் திரைக்கதை அமைக்கும் பணிகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.
Rajinikanth's Jailer movie glimps video at soon -கன்னட திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் சிவராஜ் குமார், ஜெயிலர் படத்தில் ரஜினி உடன் நடிக்க இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஐஸ்வர்யா ராய் பச்சன் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியானபோதிலும், அந்த தகவல் இதுவரை உறுதி செய்யப்படவில்லை. படத்தில் நடிக்க உள்ள மற்ற நட்சத்திரங்கள் குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் முந்தைய படமான பேட்ட திரைப்படத்தைத் தொடர்ந்து, இந்த ஜெயிலர் படத்திலும், அனிருத் ரவிச்சந்தர் இசையமைப்பாளராக பணியாற்ற உள்ளார்.
Rajinikanth's Jailer movie glimps video at soon - ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஹைதராபாத்தில் துவங்க உள்ள நிலையில், அதற்கான செட்கள் அமைக்கும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை விரைவில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு உள்ளனர். அதற்கான சூட்டிங் சமீபத்தில் நடைபெற்று உள்ளது. விரைவில் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரஜினியின் ஜெயிலர் தரிசனத்தை காண, அவரது ரசிகர்கள் காத்துக் கொண்டு உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu