திருப்பதி மாடவீதியில் செருப்புக் காலுடன் நடந்த நயன்தாரா... சர்ச்சை வெடித்தது
நடிகை நயன்தாராவும் இயக்குநர் விக்னேஷ் சிவனும் தங்களது திருமணத்தை முதலில் திருப்பதில் நடத்திடத்தான் திட்டமிட்டிருந்தனர். ஆனால், பல்வேறு காரணங்களுக்காக இறுதி நேரத்தில் திருமணத்தை மாமல்லபுரத்தில் நடத்திட முடிவெடுத்தனர்.
அதன்படி, நேற்று முன் தினம் மாமல்லபுரத்தில் உள்ள ஒரு நட்சத்திர ரிசார்ட்டில் பிரமாண்டமான கன்ணாடி போன்ற அரங்கில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்சா ஷாருக்கான் கேரளத்தின் திலீப்குமார் உள்ளிட்ட குறிப்பிட்ட திரைப்பிரபலங்கள் பங்கேற்று சிறப்பிக்க திருமண விழா நிகழ்ந்தேறியது. இந்தநிலையில், திருமணம் முடிந்தநிலையில், முதல் பயணமாக நேற்று காலை திருமலை திருப்பதிக்கு சென்று குடும்ப உறவுகள் படைசூழ சாமி தரிசனம் செய்தனர். அதன்பிறகு பகல் பன்னிரெண்டு மணியளவில் அங்கு நாள்தோறும் நடைபெறும் கல்யாண உற்சவ சேவையில் பங்கேற்றனர்.
அதன்பிறகு, விதிகளை மீறி கோயில் வளாகத்தில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். அதுமட்டுமல்லாமல், கோயிலின் நான்குமாட வீதியில் செருப்பு அணிந்து செல்லக்கூடாது என்கிற விதியினையும் மீறி, நயன்தாரா செருப்பு அணிந்து நடந்து புகைப்படங்களுக்கு போஸ் தந்தார். இதுதான் இப்போது, பெரும் சர்ச்சையாக வெடித்திருக்கிறது. நயன்தாரா நான்குமாட வீதியில் செருப்பு அணிந்தது தொடர்பாக, கோயில் நிர்வாகம் விசாரணை மேற்கொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu