நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரமாண்ட திருமணம்.. முக்கியப் பிரபலங்கள் பங்கேற்பு..!

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் பிரமாண்ட திருமணம்.. முக்கியப் பிரபலங்கள் பங்கேற்பு..!
X

நயன்தாரா.

இந்தியத் திரையுலகின் முக்கியப் பிரபலங்கள் பலரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவனின் வெல்விஷர்களின் உளமார்ந்த மகிழ்வோடும் உற்சாகக் கொண்டாட்டத்தோடும் பிரமாண்டமாக மகாபலிபுரம் ஷெரட்டன் பார்க் ஹோட்டலில் நடந்து முடிந்த திருமணத்தில் பாலிவுட், கோலிவுட் என இந்தியத் திரையுலகின் பல்வேறு மாநில திரைப் பிரபலங்கள் பங்கேற்று சிறப்பித்தனர்.

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தத் திருமண நிகழ்வில் கலந்துகொள்வார் என்று எல்லோரும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர், தலைமைச் செயலகத்தில் தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்பில் தமிழ்நாட்டில் 1627 கோடி ரூபாய் செலவில் பாரத் திட்டத்தை செயல்படுத்தும் வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் கண்ணாடி இலை கம்பிவடம் பதிக்கும் பணியைத் தொடங்கிவைக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டியிருந்ததால், இறுதி நேர மாற்றமாக திருமணத்தில் பங்கேற்கவில்லை.

ஆயினும், அவரது சார்பிலும் தனது பங்களிப்புமாக நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் திருமணத்தில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி மகிழ்ந்தார். இந்தநிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இன்று காலை நடந்த திருமண நிகழ்வில், மங்களதாளங்கள் முழங்க சுப மந்திரங்கள் ஒலிக்க, காலை 10:25 மணிக்கு விக்னேஷ் சிவன் நயன்தாராவின் கழுத்தில் மங்களநாண் பூட்டினார். தம்பதிகள் பல்லாண்டு காலம் பலசெல்வம் பெற்று வாழிய வாழிய என்று வந்திருந்த அத்தனை பேரும் வாழ்த்தி மகிழ்ந்தனர். இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் நயன் - விக்கியின் ரசிகர்களோடு பிரியமுள்ள பலரும் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

நயன்தாரா - விக்னேஷ் சிவனின் திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட்டில் இருந்து வந்த ஷாருக்கான், கேரளாவில் இருந்து வந்த நடிகர் திலீப்குமார் உள்ளிட்ட பிரபலங்களோடு கார்த்தி, அட்லி, ப்ரியா அட்லி, எஸ்.ஜே.சூர்யா, சரத்குமார், விஜய் சேதுபதி, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், மோகன் ராஜா, ஷாலினி அஜித், நெல்சன் திலீப்குமார், அனிருத், டி.டி, சரண்யா பொன்வண்ணன், கலா மாஸ்டர், தயாரிப்பாளர் போனி கபூர் உள்ளிட்ட மேலும் பல பிரபலங்களும் கலந்து கொண்டு வாழ்த்தி சிறப்பித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!