இனிதே நிகழ்ந்து நிறைவேறியது... நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்..!

இனிதே நிகழ்ந்து நிறைவேறியது...   நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்..!
X

பைல் படம்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம், முக்கியப் பிரபலங்கள் பங்கேற்க புரோகிதர்களின் சுபமங்கள மந்திர முழக்கத்துடன் நடந்தது.

ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகம் மட்டுமல்ல நயனின் அனைத்து மொழி ரசிகர்களும் ஆவலோடு எதிர்பார்த்திருந்த நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோரது திருமணம் இன்று (09/06/2022) காலை சுபவேளை சுகப்பொழுதில் இனிதே நிகழ்ந்து நிறைவேறியது.

ஒருநாள் ஒருபொழுதல்ல, சற்றேறக்குறைய ஏழாண்டுகளுக்கும் மேலாக காதலில் கசிந்துருகிய நயன் - விக்கி இருவரும் இன்று இருமனம் கலந்த திருமணத்தை ஏற்று இல்லற வாழ்வில் இனிதே இணைந்தனர். இருநூறு பேர் மட்டுமே கலந்துகொள்ளும்படியான அழைப்பு என திட்டமிட்டிருந்தாலும் பிரமாண்டமாகவே பிரமிக்கத்தக்க வகையில் திருமணம் நடந்தேறியது.

மேளம் தாளம் முழங்க, மங்களகரமான இனிய காலைப் பொழுதில் சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், மடிப்பாக்கம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களைச் சேர்ந்த சுமார் 15-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் வருகைதந்து சுபமங்கள மந்திரங்கள் ஓதி நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை இனிதே நடத்தி வைத்தனர்.

கண்கொண்டு பார்த்த கண்கள் அத்தனையும் இமைமூடாமல் பார்த்து இனிய வாழ்த்துகளைப் பொழிந்து மகிழ்ந்தன.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!