தேன் நிலவு முடிந்து 'ஜவான்' படப்பிடிப்பில் பங்கேற்றார் நயன்தாரா..!

தேன் நிலவு முடிந்து ஜவான் படப்பிடிப்பில் பங்கேற்றார் நயன்தாரா..!
X

நடிகை நயன்தாரா, நடிகர் ஷாருக்கான்.

நயன்தாரா, தாய்லாந்தில் தேன்நிலவு முடிந்து விக்னேஷ் சிவனுடன் மும்பை திரும்பியதும், 'ஜவான்' ஷூட்டிங்கில் கலந்துகொண்டார்.

இயக்குநர் அட்லி இந்தியில் இயக்குநராக அறிமுகமாகும் படம் 'ஜவான்'. இப்படத்தின் நாயகன் ஷாருக்கான். நாயகி நயன்தாரா. ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பே இப்படம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கி பின்பு, படத்தின் தொடக்கம் என்பது அப்படியே அடங்கிப்போனது. அதன்பிறகு, அண்மையில்தான் படத்தின் தயாரிப்புத் தரப்பு அதிகார பூர்வமான அறிவிப்பை வெளியிட்டது. அத்துடன் படத்தின் டைட்டிலும் டீசரும் ஒருசேர வெளியானது. அத்துடன் படப்பிடிப்பு முழு வேகமெடுத்தது.

இந்தநிலையில், கடந்த ஜூன் 9-ம் தேதி நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் மாமல்லபுரத்தில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் தங்களின் தேன்நிலவுக்காக தாய்லாந்துக்கு சென்றனர்.

தாய்லாந்தில் தேனிலவை முடித்துக்கொண்டு நேராக மும்பையில் வந்திறங்கிய நயன்தாரா, ஷாருக்கானுடன் 'ஜவான்' படப்பிடிப்பில் கலந்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு நயன்தாரா கலந்துகொள்ளும் முதல் படப்பிடிப்பு இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவு செய்ததை ஒட்டி சமூக வலைத்தளங்களில் லைவில்வந்து நயன்தாரா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பதை ஷாருக்கான் உறுதி செய்திருந்தார்.

இயக்குநர் அட்லி இயக்கத்தில் வேகமாக உருவாகி வரும் 'ஜவான்' படத்தில் நயன்தாராவுக்கான படப்பிடிப்பு ஜூலை 15-ம் தேதி வரை நடைபெறும் என்று தயாரிப்புத் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!