ருத்ரேனில் தெய்வக்? நயன்தாரா விக்னேஷ் சிவன் வெளியிட்ட அறிவிப்பு!

ருத்ரேனில் தெய்வக்? நயன்தாரா விக்னேஷ் சிவன் வெளியிட்ட அறிவிப்பு!
X
திருமணமாகி 4 மாதங்களிலேயே இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. அவர்களுக்கு உயிர், உலகம் என்று பெயர் வைத்திருப்பதாக சமூக வலைத்தளத்திலும் அறிவிப்பு வெளியானது. அதே நேரம் இவர்களின் குறுகிய பெயர்தான் அது என்றும் முழுமையான பெயர் வேறு என்றும் கூறப்பட்டது.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தமிழ், தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து வந்த நயன்தாரா, கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்டு இரு குழந்தைகளுக்கும் தாயானார். இரட்டைக் குழந்தைகளான அவர்களை கணவன் மனைவி இருவரும் அன்புடன் பராமரித்து வளர்த்து வருகின்றனர்.

நானும் ரவுடிதான் படத்தில் அறிமுகமான விக்னேஷ் சிவன் மீது காதலில் விழுந்தார் நயன்தாரா. ஆரம்பத்தில் மறைத்து வைத்திருந்தாலும் விஜய் சேதுபதிக்கும் சிலருக்கும் இந்த விசயம் அப்போதே தெரிந்திருக்கிறது. சில ஆண்டுகளில் இவர்கள் தங்கள் காதலை சோசியல் மீடியாவில் அறிவித்தனர். பின்னர் விரைவில் திருமணம் என்றும் பேசப்பட்டது. அவ்வப்போது இருவரும் ஜோடியாக செல்லும் இடங்களிலெல்லாம் புகைப்படம் எடுத்து பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடித்த காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. இதனையடுத்து இவர்களின் திருமணம் குறித்த அறிவிப்பும் வெளியானது.

கோலிவுட்டே எதிர்பார்த்து காத்திருந்த இவர்களின் திருமணம் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஷாருக்கான், ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, விஜய் சேதுபதி, கார்த்தி, ஜெயம் ரவி, அட்லீ உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தி சென்றனர். வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள முடிவெடுத்த இருவரும், அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையில் திருமணமாகி 4 மாதங்களிலேயே இரட்டைக் குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. அவர்களுக்கு உயிர், உலகம் என்று பெயர் வைத்திருப்பதாக சமூக வலைத்தளத்திலும் அறிவிப்பு வெளியானது. அதே நேரம் இவர்களின் குறுகிய பெயர்தான் அது என்றும் முழுமையான பெயர் வேறு என்றும் கூறப்பட்டது. அதை தற்போது நயன்தாரா வெளியிட்டுள்ளார்.

உயிர் ருத்ரேனில் என் சிவன் என்று ஒரு மகனுக்கும் உலக தெய்வக் என் சிவன் என்று இன்னொரு மகனுக்கும் பெயர் வைத்து அசத்தியுள்ளனர் நயன்தாரா விக்னேஷ்சிவன். ஆனால் இதனை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து வருகின்றனர். இந்த இரு குழந்தைகளும் வளர்ந்து இளைஞராகி பின் அப்பா அம்மாவிடம் தன் பெயரை யார் செலக்ட் செய்தார்கள் என்று கேட்டு துரத்தி துரத்தி அடிப்பார்கள் என்று மீம்களை பதிவிட்டு வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!