திருமணத்துக்குப் பிறகு வெளியாகப்போகும் நயன்தாராவின் முதல் திரைப்பட அறிவிப்பு..!

திருமணத்துக்குப் பிறகு வெளியாகப்போகும் நயன்தாராவின் முதல் திரைப்பட அறிவிப்பு..!
X

பைல் படம்.

நடிகை நயன்தாரா, மீண்டும் படங்களில் பிஸியாக நடித்து வரும்நிலையில், அவரது, 75வது படத்தின் அறிவிப்பு வெளியாக உள்ளது.

தமிழ்த்திரையுலகில் முன்னணி நாயகர்களுக்கு இணையாக ரசிகர்களைக் கொண்டுள்ளதோடு, தனக்கென ஒரு தனிப்பட்ட இமேஜ் மூலமாக லேடி சூப்பர் ஸ்டார் என பெயரெடுத்தவர் நடிகை நயன்தாரா. மலையாளத்தில், 'மனசினக்கரே' படத்தின் மூலம் அறிமுகமான இவர், இயக்குநர் ஹரியின் 'ஐயா' படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானார்.

தனது முதல் படத்திலேயே தமிழ்த் திரைப்பட ரசிகர்களின் கவனம்பெற்ற நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்தியத் திரைப்பட உலகின் முன்னணி நாயகியாக வளர்ந்து உயரம் தொட்டார். தமிழில் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, ஆர்யா, ஜீவா உள்ளிட்ட பல முக்கிய முன்னணி நாயகர்களுக்கு நாயகியாக நடித்து இதுவரை 70 படங்களைக் கடந்துள்ள நயன்தாரா, தனது திருமணத்துக்குப் பிறகு தற்போது இந்தியில் ஷாருக்கான் ஜோடியாக 'ஜவான்' படத்திலும் தமிழில் 'இறைவன்', 'கனெக்ட்', தெலுங்கில் 'காட் ஃபாதர்' மலையாளத்தில் 'கோல்டு' ஆகிய படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்தநிலையில், நயன்தாராவின் 75வது படம் குறித்த அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு மேல் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகி அவரது ரசிகர்களிடையே பரபரப்பைப் பற்றவைத்துள்ளது. இதுகுறித்து, டைமண்ட் ஸ்டாரில் என் 75 என குறிப்பிட்டு, இன்று அறிவிப்பு வர உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயன்தாராவின் 75வது படம் என்பதால், இதுவும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வகையில், பெண்களை மையமாகக் கொண்ட படமாகத்தான் இருக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. ஏற்கெனவே, 'அறம்' உள்ளிட்ட பெண்களை மையமாகக் கொண்ட பல படங்களில் நயன்தாரா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இதுவும் நாயகியின் முக்கியத்துவம் பெற்ற மாஸ் படமாக அமைய அதிக வாய்ப்புள்ளதாக படக்குழுவினர் பளிச்சென்று பகிர்ந்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!