நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நயன்தாரா திடீர் முடிவு

நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க நயன்தாரா திடீர் முடிவு
X

 nayanthara latest news - நடிகை நயன்தாரா சினிமாவை விட்டு விலக முடிவு

Nayanthara Latest News - நடிப்பை விட்டு நடிகை நயன்தாரா விலகுவதாக, கோலிவுட்டில் தீயாக தகவல் பரவி வருகிறது.

nayanthara latest news-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை நயன்தாரா. இவர் கடந்த ஜூன் 9ம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.


இவர்கள் இருவரும் தற்போது இரண்டு முறை ஹனிமூன் சென்றுள்ளனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா தற்போது ஒப்பந்தம் செய்திருக்கும் படங்களை நடித்து முடித்துவிட்டு, நடிப்பில் இருந்து விலகப்போவதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிப்பிற்கு முற்றுப்புள்ளி

இதற்கு காரணம் நயன்தாராவின் குடும்பத்தினர் படப்பிடிப்பின் போது, 'தாலியை கழட்ட வேண்டாம்' என்று கூறியுள்ளார்களாம். இதனால், தற்போது நயன்தாரா நடித்து வரும் படங்களில் கூட அவர் தாலியை கழட்டாமல் தான் நடித்து வருகிறாராம்.


பல விதமான கதாபாத்திரங்களில் நடிக்கும்போது கண்டிப்பாக தாலியை கழற்றி வைக்கவேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்பதால், நடிகை நயன்தாரா நடிப்பில் இருந்து விலக முடிவு செய்துள்ளாராம்.

இதன்பின் தன்னுடைய 'ரவுடி பிக்சர்ஸ்' நிறுவனத்தை கவனித்துக்கொள்ள, நயன்தாரா முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்