என்னை பற்றிய விமர்சனங்களை கண்டுகொள்ள மாட்டேன் - நடிகை நயன்தாரா 'பளிச்'

என்னை பற்றிய விமர்சனங்களை கண்டுகொள்ள மாட்டேன் - நடிகை நயன்தாரா பளிச்
X

nayanthara latest news - நடிகை நயன்தாரா. 

nayanthara latest news- 'என்னை பற்றிய விமர்சனங்கள், என் காதுகளில் விழும். ஆனால், அதை கண்டுகொள்ளாமல், விட்டு விடுவேன்,' என, சமீபத்திய நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக கூறி இருக்கிறார் நடிகை நயன்தாரா.

nayanthara latest news, nayanthara news-லேடி சூப்பர் ஸ்டாராக உள்ள நடிகை நயன்தாரா, தமிழ் சினிமாவில் உச்ச நடிகையாக இருந்து வருகிறார். ஹீரோக்களுடன் நடிப்பது மட்டுமின்றி women centric படங்களிலும் அவர் நடித்து வருகிறார். தற்போது அவரது 'கனெக்ட்' படம் ரிலீஸ் ஆவதால், அதை விளம்பரப்படுத்தும் நோக்கில், ஒரு பேட்டி ஒன்றை நயன்தாரா கொடுத்து இருக்கிறார்.


அந்த பேட்டியில், ஹீரோயின்களுக்கும் ஹீரோக்கள் அளவுக்கு மரியாதை தரப்பட வேண்டும் என கேட்டிருக்கிறார். பட விழாக்களுக்கு சென்றால் கூட ஹீரோதான் முன்னிலைப்படுத்தப்படுவார், என்னை ஓரமாக நிற்க வைத்து விடுவார்கள், அதனால் தான் நான் 'ப்ரோமோஷன்' நிகழ்ச்சிகளுக்கு செல்வதில்லை எனவும் தெரிவித்து இருக்கிறார்.நடிகர் விஜய் உடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்த நடிகை மாளவிகா மோகனன் முன்பு அளித்த பேட்டி ஒன்றில், நயன்தாராவை தாக்கி பேசி இருந்தார்.

'ஒரு ஹாஸ்பிடல் சீனில், ஹீரோயின் முழு மேக்கப் உடன், முடி கூட களையாமல் இருப்பார்,' என நயன்தாரா பெயரை குறிப்பிடாமல் மாளவிகா மறைமுகமாக குத்திப் பேசி இருந்தார்.


அந்த விஷயம் பற்றி குறிப்பிட்டு, தற்போது பேட்டியில் பதிலடி கொடுத்த நயன்தாரா, 'அதுக்காக முடியை விரிச்சு போட்டுகிட்டா உட்கார்ந்து இருக்க முடியும்? 'ரியலிஸ்டிக்' படங்களுக்கும் 'கமர்சியல்' படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. அந்த காட்சியில், சோகமாக இருக்க கூடாது என இயக்குனர் கூறினார். அவர்களுக்கு தேவையான விதத்தில்தான், நடிக்க சொல்வார்கள். அது போல தான் நடித்தேன்,' என நயன்தாரா பதிலடி கொடுத்து இருக்கிறார்.


இதே போல் 'நானும் ரவுடிதான்' படத்தில், காதுகேளாத ஒரு இளம்பெண் கேரக்டரில் நான் நடிக்க வேண்டும் என்று, அந்த படத்தின் டைரக்டர் விக்கி சொன்னார். ஆனால், என்னை சோகமான ஒரு பெண்ணாக காட்டாமல், அதில் நடிக்க வைத்தார். காது கேட்காத பெண்ணாக இருந்தும், அந்த படத்தில் என் காதுகள் மிக அழகாக காட்டப்பட்டிருக்கும்.

சினிமாவில் சில காட்சிகளில் இதுபோல் நடிக்கும்போது, நூறு விஷயங்கள் நடக்கும். சிலர், என்னை பற்றி, தவறாக விமர்சனம் செய்வார்கள். கமெண்ட் அடிப்பார்கள். அது எனக்கு தெரிய வரும்போது அதை, என் மனதுக்கும், புத்திக்கும் கண்டிப்பாக எடுத்துச்செல்ல மாட்டேன். ஆனால், அந்த விமர்சனம், என் காதுகளில் விழும். ஆனால், அதை கண்டுகொள்ளாமல், அலட்சியப்படுத்தி விடுவேன்.


என்னை பற்றி, இவ்வளவு தூரம் சிந்தித்து எழுத, கமெண்ட் அடிக்க, விமர்சனம் செய்ய அவர்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. இதற்காக இவ்வளவு நேரத்தை செலவழித்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் விமர்சிப்பதைப் பற்றி கவலைப்பட எனக்கு நேரமில்லை. ஏனென்றால், அடுத்தடுத்து எனக்கு நிறைய வேலைகள் இருக்கிறது. எனவே, அதை நான் கவனிக்க வேண்டும், என்றும் அந்த பேட்டியில் நயன்தாரா கூறியிருக்கிறார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்