நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை நடத்திக்கொடுத்த நிபுணர்கள்..!

பைல் படம்.
Today Tamil Cinema News in Tamil - பிரமாண்ட அரங்கு... பிரமிக்க வைத்த அலங்கரிப்புகள் அரங்குக்கு மட்டுமல்ல மணமக்களுக்கும்தான். ஆம். சிவப்பு நிற ஆடையில் நயன்தாராவும் நேர்த்தியான வேட்டி, குர்தா, சால்வை என விக்னேஷ் சிவனும் திருமண மேடைக்கு வந்தனர். பார்க்கும் கண்களை பரவசத்தில் ஆழ்த்தியபடி மொத்த அழகையும் கொண்ட ஒற்றை தேவதையாய் எழில்கொஞ்ச மின்னினார் நயன்தாரா.
மொத்தம் 200 பேருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தாலும் அவற்றில் திரைப்பிரபலங்கள் முப்பது பேருக்கு மட்டும்தான் அழைப்பு. ஆனால், மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு சிலர் திருமணத்துக்கு வரவில்லை என்பது பரபரப்புப் பேச்சானது. குறிப்பாக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் நடிகர் அஜித் ஆகியோர்.
ஆனாலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், நடிகர் விஜய், விஜய்சேதுபதி என முக்கியப் பிரபலங்கள் கலந்துகொண்டார்கள். இந்தநிலையில், ஒப்பனை, ஆடை அலங்காரம் என திருமணத்தின் ஒவ்வொரு பகுதிகளையும் நிபுணத்துவம் வாய்ந்த நிபுணர்கள் செய்திருக்கின்றனர். யார்யார் என்னென்ன பங்களிப்பு செய்தார்கள் என்று விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கத்ரினா கைப் - விக்கி கவுசல் திருமணத்தில் மணமக்களுக்கு ஆடை அணிகலன்கள் அலங்காரம் செய்த காஸ்ட்யூம் டிசைனர் குழுதான் நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் உடை உள்ளிட்ட அலங்காரங்களை மிக நேர்த்தியாக செய்திருந்தனராம். திருமணத்தின்போது, நயன்தாரா சிவப்பு நிறத்தில் ரோஜா பூ டிசைனர் புடவை அணிந்து வந்ததை ஒரு தேவதைக்கு ஒப்பாகத்தான் எல்லோரும் கண்குளிரக் கண்டனர். அதேபோல், விக்னேஷ் சிவனின் திருமண உடையும் பாரம்பரியத் தன்மை கொண்டதாக இருந்தது. இவை அனைத்தும் ஜேட் அட்லியரின் தலைசிறந்த கைவினை கலைஞர்களால் வடிவமைக்கப்பட்டவையாம்.
திருமண வைபவத்தின் ஏற்பாட்டாளர்கள் குறித்த தகவல்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த விக்னேஷ் சிவன், அந்த நிபுணர்களின் பெயர்களைப் பதிவிட்டுள்ளார். அதில், போட்டோகிராபர் ஜோசப் ராதிக், படத்தொகுப்பு ட்வெடிங் ஃபிலிமர், மேக்கப் பங்ககே புனீத், ஹேர் ஸ்டைலிஸ்ட் அமித்தாகூர், டிசைனர் ஜெடேபி மோனிசந்த் கிருஷ்மா, அலங்காரம், ஷலீனநாதனி மற்றும் திருமண ஏற்பாட்டாளர் ஷாதி ஸ்குவாட் என்கிற விவரத்தை பெருமிதத்தோடு வெளியிட்டுள்ளார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu