பிக்பாஸ் இனி நயன்தாரா! தீயாய் பரவும் தகவல்! உண்மை என்ன?

பிக்பாஸ் இனி நயன்தாரா! தீயாய் பரவும் தகவல்! உண்மை என்ன?
X
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை தான் தொகுத்து வழங்கவில்லை என்று உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனை தான் தொகுத்து வழங்கவில்லை என்று உலகநாயகன் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதனிடையே கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியை இனி முதல் நடிகை நயன்தாரா தொகுத்து வழங்குவார் என காட்டுத்தீ போல விசயம் ஒன்று பரவி வருகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என ரசிகர்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், உலக நாயகன் கமல்ஹாசன் தனது பரபரப்பான திரை வாழ்க்கையின் காரணமாக, பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழை தொகுத்து வழங்குவதில் இருந்து விலகியுள்ளார் என்ற தகவலை அவரே தனது எக்ஸ் வலைப்பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையறிந்த ரசிகர்கள் சிலர் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இன்னும் சிலர் வருத்தப்படுகின்றனர். பெரும்பான்மை ரசிகர்களிடையே அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் சின்னத்திரையின் முன்னணி நிகழ்ச்சியாக திகழ்ந்து வரும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை கமல்ஹாசனின் தனித்துவமான தொகுப்பாற்றலும், கருத்துகளும், நகைச்சுவையும் இன்னொரு நிலைக்கு கொண்டு சென்றது என்பதை மறுக்க முடியாது. ஆனால், தற்போது அவரது கவனம் முழுவதும் திரைப்படங்களிலேயே இருப்பதால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கமல்ஹாசன் தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படம் சமீபத்தில் வெளியாகி சராசரியான வெற்றியைப் பெற்றது. அதைத் தொடர்ந்து இயக்குனர் மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் நடித்து வருகிறார். அவருடன் சிம்புவும் படத்தில் இருக்கிறார். இதில் அவருக்கு முக்கியமான கதாபாத்திரம். இப்படி தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி இருப்பதால், அவரால் பிக்பாஸுக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை.

கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என்ற செய்தி வெளியானதும் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். அவரது தலைமையின் கீழ் இந்த நிகழ்ச்சி எந்த அளவுக்கு பிரபலமானது என்பதை இதுவே காட்டுகிறது. இதனால் அடுத்து அவர் இடத்தில் யார் இருக்கப் போகிறார்கள் என்கிற பேச்சு எழுந்துள்ளது.

விஜய் சேதுபதி

கமல்ஹாசன் இடத்தை நிரப்ப சரியான ஆள் விஜய் சேதுபதிதான். நீதியின் பக்கம் நின்று நேர்மையாக பேசும் ஒரு நபராக அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவர். அனைத்து தரப்பு மக்களுக்குமாக அவர் எளிமையாக இருப்பார் என மக்கள் நம்புவார்கள். அவரை இந்த தொடரின் தொகுப்பாளராக ஆக்கலாம். ஆனால் அவர் இதற்கு சம்மதிக்க வாய்ப்பு குறைவு.

சிலம்பரசன்

ஏற்கனவே கமல்ஹாசன் இல்லாத நேரத்தில் சிம்பு ஒருமுறை இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். அவர் மிகவும் கண்டிப்புடனும் நல்ல நட்புடனும் பழகுவார் என்று பெயரெடுத்தவர். ஆனால் அவரும் பல படங்களில் பிஸி என்பதால் சம்மதிக்க வாய்ப்பு குறைவு.

சூர்யா

பலரும் சூர்யா இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினால் நன்றாக இருக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஏற்கனவே நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய அனுபவம் இருக்கிறது. ஆனால் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து முடித்துவிட்டு காத்திருக்கிறார். அடுத்ததாக அவரது திட்டமே மிகப்பெரிய அளவில் செல்ல இருக்கிறது. இதனால் அவர் கண்டிப்பாக வரமாட்டார்.

பிரகாஷ்ராஜ்

சூர்யாவுக்கு பிறகு நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பிரகாஷ்ராஜ், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இப்படி ஆண் நடிகர்கள் பெயரை ஒருபுறம் ரசிகர்கள் விவாதித்து வர, விஜய் தொலைக்காட்சி அப்படியே லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா பக்கம் போயுள்ளது.

கடந்த மாதமே இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும், நயன்தாரா கைவசமுள்ள திரைப்படங்களில் நடித்து முடித்துவிட்டு பின் முடிவெடுப்பதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை அவர் சம்மதம் தெரிவித்தால் அவருக்கு 50 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!