இணையத்தில் வைரலான நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமண பத்திரிக்கை..!

இணையத்தில் வைரலான நயன்தாரா - விக்னேஷ் சிவன்  திருமண பத்திரிக்கை..!
X
வைரலாகி வரும் அந்த பத்திரிக்கையில், ஜூன் 9-ந் தேதி இவர்கள் திருமணம் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் எப்போது நடக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இவர்களது திருமணம் பற்றி தொடர்ந்து செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.

இந்நிலையில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடியின் திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இவர்கள் இருவருக்கும் வருகிற ஜூன் 9-ந் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக சமீபத்தில் செய்தி வெளியானது. திருப்பதியில் அவர்களது திருமணம் நடக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில், அதனை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக அவர்களது திருமண பத்திரிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த பத்திரிக்கையில், அவர்களது திருமணம் வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி மகாபலிபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற இருப்பதாக குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!