இன்னும் கொஞ்சம் கூட கொறையல ' ரொமான்ஸ்' - துாள் கிளப்புது விக்கி- நயன் கிளாமர் போட்டோஸ்
nayanthara and vignesh shivan romantic trip - ஸ்பெயின் நாட்டில் காதல் ஜோடியாக விக்கி - நயன்போட்டோஸ்
Nayanthara And Vignesh Shivan -தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டராக கூறப்படும் நடிகையான நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த சில நாட்களில், தாய்லாந்து நாட்டுக்கு ஹனிமூன் சென்றனர். அதற்குப் பிறகு, தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளனர்.
திருமணத்திற்கு முன்பாக, காதல் ஜோடியாக இருந்தபோது விக்கி - நயன், அடிக்கடி நெருக்கமான புகைப்படங்களைப் பதிவிட்டனர். அப்போது பல 90ஸ் கிட்ஸ்கள் பொங்கித் தள்ளினார்கள். திருமணம் முடிந்த பிறகாவது இந்த ஜோடி கொஞ்சம் அடங்கும் என்று எதிர்பார்த்தால் இப்போது சென்றுள்ள சுற்றுலாவிலும் ஜோடி ஜோடியாக புகைப்படங்களைப் பதிவிட்டு பேச்சுலர்களை வெறுப்பேற்றி வருகிறார்கள். இடைவிடாமல் விதவித புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார் விக்னேஷ் சிவன்.
'உங்கள் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது, போதும்' என சமூக வலைத்தளங்களில் கமெண்ட் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனால், இந்த ஜோடி நிறுத்துமா என்பதுதான் கேள்வி.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu