இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல்

இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதி போட்டோ வைரல்
X

பைல் படம்.

Nayanthara latest news tamil-விடுமுறையை கழிப்பதற்காக இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா தம்பதியினர் ஸ்பெயினுக்கு சென்றுள்ளனர்.

Nayanthara latest news tamil-இயக்குநர் விக்னேஷ் சிவன் - நடிகை நயன்தாராவின் காதல் திருமணம் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையில் நடந்தது. தேனிலவுக்காக தாய்லாந்து சென்ற அவர்கள், பின்னர் படப்பிடிப்பு காரணமாக சென்னை திரும்பினர். இதற்கிடையில், சென்னையில் நடந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கம் மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சிகளை விக்னேஷ் சிவன் இயக்கினார்.இதற்கிடையே 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா பங்கேற்றார். இந்நிலையில், இருவருக்கும் தற்போது ஓய்வு கிடைத்துள்ளதால், விடுமுறையை கழிப்பதற்காக தனி விமானம் மூலம் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு சென்றுள்ளனர். இந்த போட்டோக்களை தங்களது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் தற்போது சமூகவலை தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்