நடிகை நயன்தாரா பவளவிழா படம் நயன்தாரா 75 துவக்கம் ;சூப்பர்ஸ்டார் வாழ்த்து

நடிகை நயன்தாரா பவளவிழா படம்  நயன்தாரா 75 துவக்கம் ;சூப்பர்ஸ்டார் வாழ்த்து
X
நடிகை நயன்தாராவின் புதிய படமான 'நயன்தாரா 75' அவரது திரைப்பயணத்தின் பவளவிழாப் படமாகும்.இப்படத்தின் இயக்குநரை சூப்பர் ஸ்டார் ரஜினி வாழ்த்தினார்.

நடிகை நயன்தாரா தற்போது நான்கு படங்களில் நடித்துவருகிறார். இவை அத்தனையும் அவரது திருமணத்துக்கு முன்பே ஒப்பந்தமாகித் தொடங்கப்பட்ட படங்களாகும்.

இந்தநிலையில், நயன்தாரா தனது திருமணத்துக்குப் பிறகு ஒப்பந்தமாகி தயாராகப் போகிற படம்தான் 'நயன்தாரா 75'. இப்படத்திற்கான பூஜை அண்மையில் சென்னையில் நடந்தது.

திருமணத்துக்குப் பிறகு நயன், தான் நடிக்கவிருக்கும் படங்களில் ஏகப்பட்ட நிபந்தனைகள் விதிக்கிறார் என்ற செய்தி இணையமெங்கும் தீயாய் பரவியது. ஆனால், அவை அத்தனையும் பொய்யான வதந்திகள் என்று நயன்தாரா தரப்பில் விளக்கம் தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தது.

நயன்தாராவின் திரையுலகப் பயணத்தின் பவளவிழாப் படமாக மலரவிருக்கும் 'நயன்தாரா 75' படத்தை, பிரமாண்ட இயக்குநரான ஷங்கரிடம் துணை இயக்குநராகப் பணியாற்றிய நிலேஷ்குமார் இயக்கி இப்படத்தின் மூலம் புதுமுக இயக்குநராக அறிமுகம் ஆகிறார். நயன்தாராவுடன் படத்தில், ஜெய், சத்யராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இப்படம் குறித்த தகவல் வெளியானவுடன், நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணாவை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா, "நிஜமாகவே என்றென்றும் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய நாள் இது. நான் அறிமுகமாகும் முதல் படமான, 'நயன்தாரா 75' படத்தின் பூஜை சூப்பர் ஸ்டாரின் அழைப்பில் இருந்து ஆரம்பித்தது. அவர் ஆசிர்வதித்தார், வாழ்த்தினார். இதை விட வேற என்ன வேண்டும்..? லவ் யூ தலைவா..!" என குறிப்பிட்டு நெகிழ்ந்தார் இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!