ரஜினிக்கு நயன்தாராவின் அன்புக்கட்டளை..!

பைல் படம்.
Nayantara Latest News - நயன்தாரா - விக்னேஷ் சிவனின் ஏழாண்டுகாலத்துக்கும் மேலான காதல் அண்மையில் திருமணம் எனும் இனிய பந்தமாகி இல்லற வாழ்வில் இணைந்து மீண்டும் காதலாகித் தொடங்கியிருக்கிறது.
மாமல்லபுரத்தில் நிகழ்ந்தேறிய அந்த ஆடம்பரத் திருமணத்தில் வியந்து சொல்ல பல நிகழ்வுகள் உண்டென்கிறார்கள் திருமணத்தில் கலந்துகொண்டவர்கள். அதில் ஒன்றுதான் ரஜினி நயனுக்காக விக்கியிடம் தாலி எடுத்துக்கொடுத்த நிகழ்வும்.
கண்ணாடி மாளிகை போன்ற பிரமாண்ட அரங்கு. அதனுள்ளே, ஆகச்சிறந்த அலங்கரிப்புகள். ஆகம விதிகளின்படி 20 புரோகிதர்களால் மந்திரங்கள் ஒலிக்க நிகழ்ந்த திருமணத்துக்கு சிகரம் வைத்ததுபோல் சிறப்பாக இருந்தது நயன்தாராவின் மலர்க்கழுத்தில் மணமகனான விக்னேஷ் சிவன் மங்களநாண் பூட்டிய வைபவம்.
இந்து முறைப்படி திருமணம் நிகழ்ந்தாலும், மணமகள் நயன்தாராவுக்கு தாலி எடுத்துக்கொடுக்கும் முக்கிய நிகழ்வை சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் செய்ய வேண்டுமென்பதுதான் நயன்தாராவின் பெருவிருப்பமாம். இந்த தன் விழைவை ரஜினியிடம் நயன்தாரா, "நீங்கதான் என் திருமணத்தில் தாலி எடுத்துக்கொடுக்கணும்" என்ற அன்புக்கட்டளையை கனிவோடு தெரிவித்தவுடன் நெகிழ்ந்த ரஜினி அவ்வண்ணமே நயனின் விருப்பத்தை நிறைவேற்றி நெகிழச் செய்திருக்கிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu