பார்சிலோனா தெருக்களில் தேசியக்கொடியுடன் வலம் வந்த நயன்- விக்கி

பார்சிலோனா தெருக்களில் தேசியக்கொடியுடன் வலம் வந்த நயன்- விக்கி
X

நயன்தாரா- விக்னேஷ் சிவன்.

Nayanthara Latest News- நாட்டின் 75வது சுதத்திர தினத்தை முன்னிட்டு, விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதிகள் பார்சிலோனா தெருக்களில் தேசியக்கொடியுடன் வலம் வந்தனர்.

nayanthara latest news - இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்த சுதந்திர தினவிழா உலகம் முழுவதும் எதிரொலித்தது என்றே சொல்லலாம். திரைப்பிரபலங்கள் வெளிநாடு சென்றிருந்தாலும் தனது தாய் நாட்டின் சுதந்திரத்தை தேசியக்கொடியுடன் மிகுந்த மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடியது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருந்தது.

இந்நிலையில், சுதந்தினத்தன்று ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவிற்கு சென்றுள்ள காதல் பறவைகளான விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் தெருக்களில் இந்தியாவின் தேசியக் கொடியை இருபுறமும் உயர்த்தியபடி நடந்து சென்றனர்.

nayanthara and vignesh shivan latest news

இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோவுடன் பதிவு ஒன்றை விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்., அதில் "சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள்! அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள் ! உலகம் முழுவதும் உள்ள அனைத்து இந்தியர்களே! இந்த நாளை மிகவும் பெருமையுடனும் மகிழ்ச்சியுடனும் கொண்டாடுவோம்! ஒரு இந்திய குடிமகனாக நாம் அனைவரும் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்! உலகில் மிகவும் சுதந்திரமான, பாதுகாப்பான, ஜனநாயக, பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான வீடு நமது நாடு! என தெரிவித்துள்ளார்.

அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!