நயனுக்கும் குழந்தைக்கும் சம்பந்தமில்ல... டாக்டர் அதிர்ச்சி தகவல்

நயனுக்கும் குழந்தைக்கும் சம்பந்தமில்ல... டாக்டர் அதிர்ச்சி தகவல்
X

நயன்தாரா

nayanthara latest news - குழந்தைக்கும் நன்தாராவுக்கு ரத்த உறவு தாயாக இருக்க வாய்ப்பில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

nayanthara latest news - நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணத்திற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு இருவரையும் வாழ்த்தினர்.

திருமணத்துக்கு பிறகு இந்த ஜோடி, இரண்டு தடவை வெளிநாட்டுக்கு 'ஹனிமூன்' சென்று வந்தனர். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா, விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக தன் குடும்பத்தினரோடு துபாய் சென்றிருந்தார்.

திருமணத்துக்கு பிறகு அவர்கள் கொண்டாடிய முதல் பிறந்தநாள் என்பதால், பிறந்தநாளில் கொண்டாட்ட புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில், வெளியாகி வைரலானது. இதனைத்தொடர்ந்து, விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் குழந்தைகளோடு விளையாடும் புகைப்படங்கள் வெளியானது. அதில், 'குழந்தைகள் நேரம், எதிர்காலத்திற்காக பயிற்சி எடுக்கிறோம்' என குறிப்பிட்டிருந்தது சமூகவலைத்தளங்களில், வைரலானது. இந்த புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள், ஒருவேளை நயன்தாரா கர்ப்பமாக இருப்பதை தான், இப்படி சூசகமாக சொல்கிறாரா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்த நிலையில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் சமீபத்தில் இரட்டை மகன்களை பெற்றுள்ளதாகவும், அவர்களை வரவேற்பதாக சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர்களின் மகன்களின் படங்களை வெளியிட்டு பெயர்களை உயிர் மற்றும் உலகம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் குழந்தைகளின் முகங்களை வெளிப்படுத்தவில்லை.

மேலும் அந்த குழந்தைகளுக்கு உயிர் மற்றும் உலகம் என பெயர் வைத்திருந்தனர்.

வாடகைத்தாயின் மூலம் பிறந்த விக்கி - நயன்தாராவின் குழந்தைகள் குறித்து பல்வேறு சட்டப் பிரச்சனைகள் எழுந்தது. மேலும் நயன்தாராவிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருந்தார்.

பொதுவாக வாடகைத்தாய் மூலம் குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றால் இந்தியாவில் பல்வேறு சட்ட விதிமுறைகள் உள்ளன. இந்த சட்ட விதிமுறைகளில் முக்கியமாக திருமணமான தம்பதிகளுக்கு குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் குழந்தையின்றி இருக்க வேண்டும். வாடகைத்தாய் சம்பந்தப்பட்டவர்களின் உறவு முறையாக இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் உள்ளன.

nayanthara news

அதன்படி, வாடகைத்தாய் முறை குறித்து பல மருத்துவர்கள் இணையத்தில் பேசி வரும் நிலையில், வாடகை தாய் முறையில் பெற்றுக்கொள்ளும் குழந்தைக்கு ரத்த உறவானது தாயார், வாடகை தாயாக இருப்பார்களா அல்லது யார் பெற்றுக்கொள்ள விரும்புகிறார்களோ அவர்கள் அக்குழந்தைகளுக்கு தாயா என கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

இந்த கேள்விக்கு பதிலளித்த மருத்துவர் ஒருவர், இந்தியாவில் பாரம்பரியமான வாடகைத்தாய் முறை இருந்தது. அந்த முறையில் குழந்தை யார் வயிற்றில் வளர்கிறதோ அவர்களே அக்குழந்தைக்குத் தாயாக இருப்பார். ஆனால் இந்த முறை இந்தியாவில் தடை செய்யப்பட்டு பல ஆண்டுகள் ஆகிறது என தெரிவித்திருந்தார்.

மேலும், 2வது முறை ஐ.வி.எப் என்ற கருத்தரிப்பு முறை, இது தான் தற்போது இந்தியாவில் சட்ட ரீதியாக அனுமதிபெற்று செயல்பட்டு வருகிறது. இந்த முறையின் மூலம் பிறக்கும் குழந்தைகளுக்கு, வாடகை தாய் தேவைப்படாது. அப்படியே தேவைப்பட்டாலும் வாடகைத் தாயின் குழந்தையாக அவர்கள் இருக்க மாட்டார்கள் என விளக்கமளித்திருந்தார்.

இதுகுறித்து மேலும் மருத்துவர்கள் தெரிவிக்கையில், நயன்தாரா துபாயில் இருந்த தனது உறவுமுறை பெண்ணை வாடகை தாயாக நியமித்து, இரட்டை குழந்தைகளை பெற்றுக்கொண்ட நிலையில், அந்தக்குழந்தைகளுக்கு நயன்தாரா ரத்த உறவு தாயாக இருக்க வாய்ப்பில்லை எனவும், ஆனால் விக்னேஷ் சிவன் அக்குழந்தைகளுக்கு தந்தை என்பதில் மாற்றுக் கருத்தில்லை என தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
அறச்சலூா்: 200 மாணவர்களின் படைப்புகளுடன் அறிவியல் கண்காட்சி வெற்றிகரமாக முடிந்தது!