சமந்தாவைப் பற்றி பேசிய முன்னாள் கணவர்! இப்படி சொல்லிட்டாரே!

சமந்தாவைப் பற்றி பேசிய முன்னாள் கணவர்! இப்படி சொல்லிட்டாரே!
X
தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. தற்போது உடல் நலக் குறைவால் ஓய்விலிருந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகையாக இருந்தவர் சமந்தா. தற்போது உடல் நலக் குறைவால் ஓய்விலிருந்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

சமந்தாவும் நாக சைத்தன்யாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். தமிழகத்தின் மகள் ஆந்திரத்தின் மருமகளானார். சமூக வலைத்தளங்களில் மிகவும் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் இவர்களும் ஒருவர். திருமணமாகி சில ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் திடீரென மனக்கசப்பு உருவாக, அது பெருசாகி மணமுறிவில் வந்து நின்றது. எத்தனையோ பேர் மீண்டும் பேசி அவர்களை பேசவைக்க முயன்றும் அவர்களுக்குள் ஒத்து வராததால் பிரிந்துவிட்டனர்.

நாகசைத்தன்யா தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோவாக இருந்தாலும் தமிழ் நன்றாக பேசக் கூடிய சென்னையில் வளர்ந்த இளைஞர். இப்போதுதான் முதன்முறையாக தமிழில் படம் நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள கஸ்டடி திரைப்படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் வரும் 12ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

இந்த படத்துக்கான விளம்பரம் செய்யும் பணியில் படக்குழு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. நாக சைத்தன்யாவும் பல யூடியூப் சேனல்களிலும் பேட்டி அளித்து வருகிறார். இந்நிலையில் அவரிடம் சமந்தா குறித்தும் பல கேள்விகள் தொடர்ந்து கேட்கப்பட்டு வருகின்றன.

சமீபத்தில் அவர் பேசிய பேட்டி ஒன்றில் சமந்தா குறித்தும் அவருடனான வாழ்க்கை குறித்தும் மனம் திறந்துள்ளார் நாக சைத்தன்யா. நானும் சமந்தாவும் விவாகரத்து பெற்றது துரதிஷ்டவசமானது. எங்களின் பிரிவு குறித்து பேசுபவர்கள் அதை நிறுத்த வேண்டும். நானும் சமந்தாவும் அதனைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு வந்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.

நாங்களே கடந்து வந்துவிட்ட நிலையில் மக்கள் அதை ஏன் மீண்டும் மீண்டும் பேச வேண்டும். அவர்களுக்கு மீடியாக்கள் தொடர்ந்து நினைவுபடுத்திக் கொண்டே இருப்பது எதனால் என்று கேட்டுள்ளார். அந்த டாபிக் முடிந்துவிட்டது. அதனை கைவிடுங்கள் என்றார்.

எதனை நினைத்தும் நான் வருத்தப்படவில்லை. கடந்த காலத்தில் நிறைய கற்றுக் கொண்டேன். என்னைப் பற்றி எழுதினால் கூட நான் கவலைப்படமாட்டேன். ஆனால் மூன்றாம் நபர் ஒருவருடன் சேர்த்து வைத்து பேசுவதும் என் வாழ்க்கை குறித்து நீங்கள் யூகம் செய்வதும் வேதனையாக இருக்கிறது. ஒரு தவறும் செய்யாத ஒருவரை அவமரியாதை செய்கிறார்கள் இது தவறு என்று கூறியுள்ளார்.

நாக சைத்தன்யாவின் பேட்டிகளைப் பார்ப்பவர்கள் அவர் மிகுந்த பக்குவமாக பேசுவதாக பாராட்டி வருகின்றனர். எத்தனை பேட்டிகளில் சமந்தாவைப் பற்றி கேட்டாலும் அவர் அமைதியாகவும் பெருமையாகவும் பேசுகிறார். இவரின் இந்த குணம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது என கமெண்ட்களில் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!