ரன்பீர் கபூர் படத்துக்காக தேதி மாற்றப்பட்ட தேசிய சினிமா தினம்..!
பைல் படம்.
நடிகர் ரன்பீர் கபூர், ஆலியா பட், அமிதாப்பச்சன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் 'பிரம்மாஸ்திரா' படம் வெளியானது. இப்படம் பாய்காட் ட்ரெண்டிங்கை புறந்தள்ளி இந்தி பேசும் மாநிலங்களில் வரவேற்பையும் வசூலையும் ஒருசேர அள்ளிக்கொடுத்து வருகிறது.
இந்தநிலையில், அதிக பட்ஜெட்டில் உருவான 'பிரம்மாஸ்திரா'வின் வசூல் பாதிக்கக்கூடாது என்பதற்காக, செப்டம்பர் 16-ம் தேதி நடக்கவிருந்த தேசிய சினிமா தினத்தை செப்டம்பர் 23-ம் தேதிக்கு மாற்றிவைத்துள்ளனர்.
இந்திய மல்டிஃபிளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த தேசிய சினிமா தினத்தன்று இந்தியா முழுவதும் உள்ள சுமார் 4000 மல்டி ஃப்ளெக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் 75 ரூபாய் என தெரிவித்திருந்தனர்.
இது தமிழ்நாட்டுக்குப் பொருந்தாது என்று ஏற்கெனவே, தமிழ்நாடு மல்டி ஃபிளெக்ஸ் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில்தான் தேசிய சினிமா தினத்தின் தேதி மாற்ற அறிவிப்பு வெளியானது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu