ஹீரோவாக ஆசைப்பட்ட அனிருத்: அட்வைஸ் சொன்ன ரஜினி

Anirudh Tamil Movie -தனுஷ் நடிப்பில் வெளிவந்த 3 படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தொடர்ந்து விஜய்யுடன் கத்தி, அஜித்துடன் வேதாளம், ரஜினியுடன் பேட்ட, கமலுடன் விக்ரம் என தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
மேலும், தற்போது பல முன்னணி நட்சத்திரங்களின் படங்களை கைவசம் வைத்துள்ளார். இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், படங்களில் இடம்பெறாத ம்யூசிக் வீடியோக்களில் நடித்துள்ளார் அனிருத்.
இந்நிலையில், அனிருத் ஒரு சூப்பர்ஹிட் படத்தில் நடிக்கவிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வெளிவந்த திரைப்படம் நானும் ரவுடி தான். படத்தின் கதையை எழுதிவிட்டு விஜய் சேதுபதியிடம் கூறியுள்ளார். ஆனால் அந்தக் கதாபாத்திரம் செட் ஆகுமா என்ற சந்தேகத்தில் வேண்டாம் என்று சொல்லிவிட்டாராம். அதன் பின்னர் பல கதாநாயகர்களிடம் கதை சொல்லியுள்ளார் விக்னேஷ்.
பல நடிகர்களிடம் கதை சொல்லியிருந்தாலும், இசையமைப்பாளராக அனிருத்தை மட்டுமே மனதில் வைத்திருந்தார் விக்னேஷ். ஒரு கட்டத்தில் யாரும் நடிக்க வராதபோது, அனிருத்தையே ஹீரோவாக்கிவிடலாம் என்ற முடிவுக்கு வந்து அவரிடமும் கேட்டுள்ளார். அனிருத்தும் அதில் நடிக்க சம்மதம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதனை கேள்விப்பட்டு நடிகர் ரஜினிகாந் அனிருத்தை அழைத்து, உங்களுக்கு யாரைப் போன்று வர வேண்டும் என்று ஆசை. சினிமாவிற்கு எதற்கு வந்தீர்கள் என்று கேட்க, AR ரகுமான்தான் தனக்கு இன்ஸ்பிரேஷன். அவரைப் போல் இசைத் துறையில் சாதிக்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு ரஜினி, அதனையே பின்பற்றுங்கள். தடம் மாறி விடாதீர்கள் என்று அட்வைஸ் கூறிய பின்னர்தான் அனிருத் அந்த முடிவை கைவிட்டதாக கூறப்படுகிறது.
அப்படிப்பட்ட ஒரு தருணத்தில்தான் மீண்டும் விஜய் சேதுபதியிடம் கதை சொல்லியுள்ளார். இரண்டாம் முறை கேட்டதும் அவருக்கு கதை பிடித்துப் போய் படத்தில் நடிக்க சம்மதித்தார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu