புதுச்சேரி திரையரங்குகளில் திரைப்பட கட்டணம் 100 ரூபாய் வரை உயர்வு
பீஸ்ட் படம் ரிலீஸாக் இருக்கும் நேரத்தில் புதுச்சேரியில் உள்ள திரையரங்குகளில் திரைப்பட கட்டணம் 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டு இருக்குதாம்.
இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிச்ச நிலையில், கட்டணம் நிரந்தரமா உயர்த்தப்படலை என்று புதுச்சேரி அரசு விளக்கம் அளிச்சிருக்குது. வரும் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நான்கு நாட்களுக்கு மட்டும் புதுச்சேரி அரசு உத்தரவுப்படி காட்சிகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.
இதன்படி 3 ஆம் வகுப்பு கட்டணம் 50 ரூபாய் இருந்து 150 ரூபாயாகவும், இரண்டாம் வகுப்பு கட்டணம் 75ரூபாயில் இருந்து 175 ரூபாயாகவும், முதல் வகுப்பு கட்டணம் 100 ரூபாயில் இருந்து 200 ரூபாயாகவும், பால்கனி கட்டணம் 150 ரூபாயில் இருந்து 250 ரூபாயாகவும், பாக்ஸ் கட்டணம் 160 ரூபாயில் இருந்து 260 ரூபாயாகவும் என்று உயர்த்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனா இந்த விலை உயர்வு குறித்து பொதுமக்க கூறுகையில், இதுவரை இதுபோல் நடந்ததில்லை. மக்களை ஏமாற்றும் செயல். எத்திரைப்படம் வந்தாலும் சரியான கட்டணமே வாங்க வேண்டும். பெரிய நடிகரின் படம் என்றால் 100 ரூபாய் வரை அனைத்து வகுப்புகளுக்கும் உயர்த்த அரசு அனுமதி அளித்துள்ளது தவறான போக்கு என்று குற்றம் சாட்டுறாய்ங்க.
கட்டண உயர்வு கூறித்து ஆட்சியர் அலுவலக தரப்பில் விசாரித்த போது, புதுச்சேரியில் திரையரங்குகளில் கட்டணத்தை உயர்த்த அரசு அனுமதி தரவில்லை என்று குறிப்பிட்டனர். ஆனால் திரையரங்கு வட்டாரங்களோ, பீஸ்ட் திரைப்படத்துக்கு கட்டணம் நான்கு நாட்களுக்கு அனைத்து வகுப்புகளிலும் 100 ரூபாய் வரை உயர்த்தப்பட உள்ளது.
அதற்காக போர்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. மக்கள் பார்வைக்காக இதுவரை வைக்கவில்லை. ஆனால் யாரோ அப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விட்டனர் அப்படீன்னு சேதி பரவுது
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu