Mirnalini Ravi Birthday 2023-என் அம்மா தான் எனக்கு எல்லாமே: டப்ஸ்மாஷ் குயின் மிருணாளினி

Mirnalini Ravi Birthday 2023-என் அம்மா தான் எனக்கு எல்லாமே: டப்ஸ்மாஷ் குயின் மிருணாளினி
X
Mirnalini Ravi Birthday 2023-அன்னையர் தினமான மே 10-ம் தேதி மிருணாளினி ரவி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். தற்சமயம் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார்.

Mirnalini Ravi Birthday 2023-டப்ஸ்மாஷ் குயின் மிருணாளினி ரவி 2019 இல் ஹரிஷ் ஷங்கரின் கடலகொண்டா கணேஷ் படத்தில் புஜ்ஜம்மாவாக நடித்ததன் மூலம் டோலிவுட்டில் அறிமுகமானார். தற்போது, அஜய் ஞானமுத்துவின் கோப்ரா படத்தில் சீயான் விக்ரமுக்கு ஜோடியாக கதாநாயகியாகவும், எம்.ஜி.ஆர் மகன் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாகவும் நடித்து உள்ளார். விஜய் சேதுபதி திருநங்கையாக நடித்த சூப்பர் டீலக்ஸ் படத்திலும் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இந்நிலையில், அன்னையர் தினமான மே 10-ம் தேதி மிருணாளினி ரவி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். தற்சமயம் இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டு இருந்தார். அதி அவர் கூறியிருப்பதாவது:


“ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அன்னையர் தினம் எனது பிறந்த நாளான மே 10ஆம் தேதி வருகிறது. என் தாய் தன் மகளைப் பெற்றெடுத்த நாளை, உலகமே அன்னையர் தினமாகக் கொண்டாடும் நிகழ்வில் மிகவும் உற்சாகமாகி விடுகிறார். நான் என் அம்மாவை நேசிப்பதால் அன்னையர் தினம் எனக்கு ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது.


Mirnalini Ravi Birthday 2023-என் தாய் எனக்கு அதிக செல்லம் தருவார். ஆனால் அதே நேரத்தில் அவர் மிகவும் கண்டிப்பானவர். பாராட்டுவதற்குப் பதிலாக, என் பக்கத்தில் ஏதேனும் தவறுகள் இருந்தால் அதை சுட்டிக்காட்டுவார். நான் இன்று எதற்கும் பயப்படாமல் தெளிவான முடிவெடுக்கும் நபராக இருப்பதற்கு இதுதான் காரணம் என்று நினைக்கிறேன். குழந்தைப் பருவத்தில், மற்ற அம்மாக்கள் தங்கள் குழந்தைகளுடன் ஜாலியாக இருப்பதை நான் பார்த்து இருக்கிறேன்., அதே நேரத்தில் என் அம்மா என்னிடம் மிகவும் கண்டிப்பாக இருப்பார். அதனால் என் அம்மாவை எனக்கு பிடிக்காது. ஆனால், நான் வளரும் போது, வாழ்க்கையில் எந்தச் சூழலையும் சொந்தமாகச் சமாளிக்கும் ஒரு சிறந்த மனிதனாக அது என்னை வளரச் செய்தது என்பதை உணர்ந்தேன். என் அம்மாவை நேசிக்க எனக்கு மில்லியன் கணக்கான காரணங்கள் உள்ளன. இதை சொல்ல இந்த ஒரு நாள் போதாது. என் அம்மாவுக்கு இனிய அன்னையர் தின வாழ்த்துக்கள். இவ்வாறு மிருணாளினி தெரிவித்தார்.

Tags

Next Story