மிஷ்கின் சாருக்கு மில்லியன் நன்றிகள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கம்

மிஷ்கின் சாருக்கு மில்லியன் நன்றிகள்: இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கம்
X

பைல் படம்.

இயக்குநர் மிஷ்கின் உடனான பணியாற்றிய அனுபவம் குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடந்து வருகிறது. இந்தப் படத்தில் இயக்குநர் மிஷ்கின் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படப்பிடிப்புகாக ஜம்மு காஷ்மீர் சென்று கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை திரும்பினார்.

லியோ திரைப்படத்தில் நடித்த அனுபவங்களை பற்றியும், படக்குழுவினர் தன்னிடம் நடந்துகொண்ட விதத்தை பற்றியும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அந்தப் பதிவில், “ என் லோகேஷ் கனகராஜ், ஒரு தேர்ச்சி பெற்ற இயக்குநராக அன்பாகவும் கண்டிப்பாகவும், ஒத்த சிந்தனையுடனும் ஒரு பெரும் வீரனைப்போல் களத்தில் இயங்கிக்கொண்டிருந்தான். என் கடைசி காட்சி முடிந்தவுடன் என்னை ஆரத்தழுவினான், அவன் நெற்றியில் நான் முத்தமிட்டேன்.

என் அருமை தம்பி விஜய்யுடன் ஒரு நடிகனாக இந்த படத்தில் பணியாற்றியதை நினைத்து சந்தோஷம் அடைகிறேன். அவர் என்னுடன் பண்பாக நடந்து கொண்ட விதத்தையும் அவர் அன்பையும் நான் என்றும் மறவேன். லியோ திரைப்படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியடையும் என்று அந்த பதிவில் கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் டிவிட்டரில் மிஷ்கின் குறித்து பதிவொன்றை எழுதியுள்ளார். அந்தப் பதிவில், உங்களுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றமைக்கு நான் நன்றி உள்ளவனாகவும், அதிர்ஷ்டம் செய்தவனாகவும் உணர்கிறேன். இந்த உணர்வை வெளிப்படுத்த எவ்வளவு நன்றிகள் சொன்னாலும் போதாது. இருந்தாலும் மில்லியன் நன்றிகள் சார். நீங்கள் செட்டில் இருந்த தருணம் அற்புதமானதாக இருந்தது” என லோகேஷ் கனகராஜ் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!