'மெட்டி ஒலி'யில் நடித்த நடிகை திடீர் மரணம்: அதிர்ச்சியில் பிரபலங்கள்

மெட்டி ஒலியில் நடித்த நடிகை திடீர் மரணம்: அதிர்ச்சியில் பிரபலங்கள்
X
சின்னத்திரையில் பிரபலமான 'மெட்டி ஒலி' தொடரில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி, சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 40.

திருமுருகன் இயக்கி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தொடர் 'மெட்டி ஒலி'. மிகவும் பிரபலமான இத்தொடரில், விஜி என்ற கேரக்டரில் நடித்தவர் நடிகை உமா மகேஸ்வரி. திருமுருகன் மனைவியாக அவர் நடித்த, இந்த கேரக்டர் மிகவும் பிரபலமானது; நல்ல பேர் வாங்கிக் கொடுத்தது.

இதனிடையே, கால்நடை மருத்துவர் முருகன் என்பவரை, சில ஆண்டுகளுக்கு முன்பு மணந்தார். அதன் பின்னர், சின்னத்திரை தொடர்களில் அவர் தலைகாட்டவில்லை. அத்துடன், சென்னை காட்டுப்பாக்கம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அண்மையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாக வந்த கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

கடந்த சில மாதங்களாக உமா மகேஸ்வரிக்கு உடல் நலக்குறைவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை மரணமடைந்தார். இளம் வயதிலேயே நடிகை உமா காலமானது, சின்னத்திரை பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி வருகிறது. பலரும், சமூக வலைதளங்கள் வாயிலாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!