மருத்துவ சிகிச்சை முடிந்தது: பூரண நலத்துடன் வீடு திரும்பினார் பாரதிராஜா..!

மருத்துவ சிகிச்சை முடிந்தது: பூரண நலத்துடன் வீடு திரும்பினார் பாரதிராஜா..!
X
உடல் நலக்குறைவினால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த இயக்குநர் பாரதிராஜா, பூரண நலம் பெற்று வீடு திரும்பினார்.

இயக்குநர் இமயம் என்று ரசிகர்களாலும் திரையுலகினராலும் கொண்டாடப்படும் இயக்குநர் பாரதிராஜா, கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக தி.நகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக எம்.ஜி.எம் மருத்துவமனைக்கு மாற்றி அனுமதிக்கப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வந்தார்.

பாரதிராஜா பூரணமாக உடல்நலம் குணமடைந்த நிலையில், இன்று(09/09/2022) பகல் 12:30 மணியளவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.

மருத்துவமனையில் இருந்து பாரதிராஜா டிஸ்சார்ஜ் ஆவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய பாரதிராஜாவின் மகனும் நடிகருமான மனோஜ் பாரதி, "எனது தந்தை பாரதிராஜாவின் உடல் நிலை நன்றாக உள்ளது. ஆரோக்கியமாக இருக்கிறார். மீண்டும் நீங்கள் பழைய பாரதிராஜாவைப் பார்க்கும் அளவிற்கு அவர் உடல்நலம் தேறி உள்ளார்.

ஏதோ அவர் பணத்திற்கு வழி இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. தயவுசெய்து அதுபோன்ற தகவல்களை பரப்ப வேண்டாம். என்னுடைய சொந்த பணத்தில் அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.

அவர் இப்போது படப்பிடிப்புக்கு செல்ல வேண்டும் என ஆசைப்படுகிறார். எல்லாமே அவருக்கு சினிமாதான். சினிமாதான் அவருடைய மூச்சு, சுவாசம் எல்லாம். அவரது உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் நான்கைந்து படங்களின் படப்பிடிப்புகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

மருத்துவமனையில் அவர், அனுமதிக்கப்பட்டிருந்தபோது, திரைப் பிரபலங்கள் நிறைய பேர் நேரில் வந்து அவரை சந்தித்தனர். சிகிச்சையில் இருந்தபோதே அவர் நடித்த படங்களை எல்லாம் அவருக்குப் போட்டுக் காட்டினார்கள். மீண்டும் 'திருச்சிற்றம்பலம்' படம் பார்க்க வேண்டும் என அவர் கேட்டார். விரைவில் குணமடைந்து அவர் அனைவரையும் சந்திக்க உள்ளார்" என்றார்.

அவருக்கு சிகிச்சை வழங்கிய மருத்துவர் சுவாமி கண்ணு மற்றும் சபாநாயகம், "இயக்குநர் பாரதிராஜா நுரையீரல் கடுமையாக பாதிக்கப்பட்டு மருத்துவனைக்கு வந்தார். தற்போது அவர் முழு குணம் அடைந்திருக்கிறார். தொடர் பரிசோதனை மட்டும் தேவைப்படுகிறது.

மீண்டும் ஐந்து நாட்கள் கழித்து அவர் பரிசோதனைக்கு வரவேண்டும், வயது முதிர்வு காரணமாக அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. தற்போது அதுவும் சரி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியதால் விரைவில் குணம் அடைந்துள்ளார்" என்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil