என்னங்க சொல்றீங்க மருதநாயகம்தான் தக்லைஃப் ஆ?

என்னங்க சொல்றீங்க மருதநாயகம்தான் தக்லைஃப் ஆ?
X
கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் மருதநாயகம் படம் விரைவில் உருவாகும் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள இந்த நேரத்தில் இன்னொரு தகவல் வெளியாக அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது

கமல்ஹாசன் இயக்கம் மற்றும் நடிப்பில் மருதநாயகம் படம் விரைவில் உருவாகும் என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ள இந்த நேரத்தில் இன்னொரு தகவல் வெளியாக அவர்களுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. மருதநாயகம் படத்தை காண வேண்டும் என நினைப்பவர்களுக்கு இது இன்ப அதிர்ச்சியா அல்லது பேரதிர்ச்சியா என்பது தெரியவில்லை.

இதுகுறித்து ஏற்கனவே பரவி வரும் தகவலில், தக்லைஃப் படத்துக்கு பிறகு கமல்ஹாசனும் மணிரத்னமும் மீண்டும் இணைந்து புதிய படத்தை தர இருக்கிறார்கள் எனவும், அதுதான் மருதநாயகம் என்றும் கூறப்படுகிறது. கமல்ஹாசனுடன் மணிரத்னமும் இணைந்து படத்தை எடுத்து முடிக்க திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

விக்ரம் படத்தில் ஏஜென்ட் விக்ரமின் பழைய தோற்றத்துக்காக டிஏஜிங் ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார். அது இன்னமும் வெளியிடப்படாத நிலையில், அப்படியே இருக்கிறது. அதேநேரம் தற்போது மருதநாயகம் படத்தை திரும்ப எடுக்கத்தான் கமல்ஹாசன் தற்போது ஏஐ குறித்து படிக்க அமெரிக்கா சென்றிருப்பதாக கூறப்படுகிறது.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். மருதநாயகம் படத்தின் கதை முழுவதுமாக எழுதப்பட்டு, நடிகர்கள் தேர்வு எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. ஆனால் எல்லாம் பழைய காலம் மலையேறிவிட்டது. காரணம் நடிகர்கள் அனைவருக்கும் வயதாகிவிட்டது. ஒரு சிலரைத் தவிர மற்ற அனைத்து நடிகர்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் கமல்ஹாசன்.

மருதநாயகம் படத்தில் கன்னட நடிகர் விஷ்ணு வர்தன், சத்யராஜ், நாசர், அம்ரிஷ் புரி, நசுருதீன் ஷா, பசுபதி, பாபு, ஆர்சி சக்தி உள்ளிட்டவர்கள் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தனர். இவர்களில் நாசர், சத்யராஜ், பசுபதி தவிர மற்றவர்கள் இந்த கதையில் நடிக்க இப்போது சம்மதிப்பார்களா என்பது தெரியாது. இதனால் மொத்தமாக நடிகர்களை மாற்ற முடிவு செய்துள்ளாராம் கமல்ஹாசன்.

தற்போது அமெரிக்காவில் ஏஐ தொழில்நுட்பம் குறித்து படிக்க சென்றிருக்கும் கமல்ஹாசன், அடுத்ததாக இருக்கும் கமிட்மெண்ட்களை முடித்துவிட்டு மருதநாயகம் படத்தை எடுக்கும் முயற்சியில் இறங்குவார் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்குள் இதுகுறித்த இன்னொரு தகவல் வெளியாகியுள்ளது.

அதிகாரப்பூர்வமில்லாத இந்த தகவலில், கமல்ஹாசனும் மணிரத்னமும் தற்போது உருவாக்கி வரும் தக்லைஃப் படத்திலேயே மருதநாயகம் படத்துக்காக எழுதப்பட்டிருந்த பல காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. கமல்ஹாசனின் தோற்றமும் கிட்டத்தட்ட இதுபோலவே இருக்கிறது. மருதநாயகம் படத்தை இந்த காலக்கட்டத்துக்கு ஏற்றவாறு எடுக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மருதநாயகம் படத்துக்காக எழுதப்பட்ட காட்சிகள் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கிறதா என்பது அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. ஒருவேளை அப்படி பயன்படுத்தப்பட்டிருந்தால் மருதநாயகம் திரைப்படம் கனவாகே இருக்கும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!